செய்திகள்

விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் எழுதிய கையெழுத்து பிரதி ரூ.11 கோடிக்கு ஏலம்

லண்டன், செப். 28–

பிரபல இயற்பியல் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், தான் முன்மொழிந்த சிறப்பு சார்பியல் கொள்கை, பொது சார்பியல் கொள்கை குறித்து கைப்பட எழுதிய பிரதி ரூ.10 கோடியே 70 லட்சத்துக்கு ஏலத்தில் விற்பனையானது.

அறிவியலில் முக்கிய இடம் வகிக்கும் சிறப்பு சாா்பியல் கொள்கையை 1905-ஆம் ஆண்டிலும், பொது சார்பியல் கொள்கையை 1915-ஆம் ஆண்டிலும் ஐன்ஸ்டீன் வெளியிட்டார். இவற்றைக் குறித்து ஜெர்மன் மொழியில் விளக்கமளித்து அவர் எழுதிய கட்டுரைகள் நியூயார்க் டைம்ஸ் நாளிதழில் கடந்த 1929-ஆண்டு பிப்ரவரி 3-இல் வெளியானது.

ரூ.10 கோடியே 70 லட்சத்துக்கு ஏலம்

தற்போது, அந்தப் பிரதியானது சீனாவின் ஷாங்காய் நகரத்தில் செப்டம்பர் 28-ந்தேதி கிறிஸ்டி ஏல நிறுவனம் நடத்திய ஏல விற்பனையில், ரூ.10.7 கோடிக்கு விற்பனையானது. மொத்தம் 14 பக்கங்களைக் கொண்ட இந்தப் பிரதியில் சார்பியல் கொள்கையின் பயன்பாடு குறித்து விளக்கப்பட்டுள்ளது.

இந்தக் கொள்கைகளுடன் தொடா்புடைய இரு சமன்பாடுகள், காலம்-இடம் தொடர்பு குறித்து விளக்கும் ஒரு வரைபடம், அறிவியல் சூத்திரங்கள் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *