சினிமா

விஜய் ஆண்டனி நடிக்கும் அரசியல் த்ரில்லர்

பிரசாந்த் நடித்த ஜாம்பவான் , அர்ஜுன் நடித்த வல்லக்கோட்டை, சசிகுமார் – நிக்கிகல்ரானி நடிப்பில் வெளியாக இருக்கும் ராஜ வம்சம் ஆகிய படங்களின் தயாரிப்பை தொடர்ந்து தற்போது மெட்ரோ பட இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கும் புதிய பெயரிடப்படாத படத்தை டி.டி. ராஜா தயாரிக்கிறார்.

அரசியல் கலந்த த்ரில்லர் படமான இப்படத்தில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிக்கிறார் .

இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக ‘ மார்க்கெட் ராஜா MBBS” படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான காவ்யா தாபர் கதாநாயகியாக நடிக்கிறார். இவர் சினிமாவில் ‘ ஈ மாயா ப்ரேமிட்டோ ‘ எனும் தெலுங்கு படத்தில் அறிமுகமாகினார். திரைக்கு வரும் முன்னால் ஒரு மாடலாக வலம் வந்தார்.

தெகிடி படம் மூலம் அறிமுகமான நிவாஸ் கே பிரசன்னா இப்படத்திற்கு இசையமைக்கிறார். என்.எஸ். உதயகுமார் ஒளிப்பதிவு செய்கிறர். இணை தயாரிப்பு – ராஜா சஞ்சய். மக்கள்தொடர்பு – ரியாஸ் கே அஹமது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *