சினிமா

விஜய்யின் ‘சர்கார்’ முதல்நாள் வசூல் ரூ.30 கோடி; ரஜி­னிகாந்த் வசூலை முறி­ய­டித்து புதிய மைல்­ கல்

சென்னை, நவ. 7–
தீபா­வளி நாளில் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள ‘சர்கார்’ படம், முதல் நாளில், தமி­ழ­கத்­தில் ரூ.30 கோடி வசூலித்து புதிய மைல்கல் சாதனையை எட்டியிருக்கிறது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் ‘சர்கார்’. ‘துப்பாக்கி’, ‘கத்தி’ ஆகிய படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஏ.ஆர்.முருகதாஸ் – விஜய் இணைந்த படம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு உருவானது.
முதல் காட்சி காலை 7 மணிக்கு மேல் தான் என்று அறிவித்தாலும், பல்வேறு திரையரங்குகளில் அதிகாலையிலேயே ­படம் திரையிடப்பட்டது. ‘சர்கார்’ திரையிடப்பட்ட முதல் நாள் அனைத்து திரையரங்குகளிலுமே அனைத்து காட்சிகளுக்குமே டிக்கெட் விற்றுத் தீர்ந்தன.
முதல் நாள் மொத்த வசூல் சுமார் 30 கோடியை கடந்திருக்கிறது. இதற்கு முன்பாக எந்தவொரு தமிழ் படமுமே, முதல் நாளில் இவ்வளவு பெரிய வசூல் செய்ததில்லை என்­பது குறிப்­பி­டத்­தக்­க­து.
சென்னையில் முதல் நாள் வசூலில் 2 கோடியை கடந்து சாதனை புரிந்திருக்கிறது. இதற்கு முன்பாக முதல் நாளில் ரஜி­னிகாந்த் நடித்த ‘காலா’ வசூலித்த ரூ. 1.76 கோடியே சாதனையாக கருதப்பட்டது.
அமெ­ரிக்­கா­வில்
152 தியேட்­டர்­கள்
மும்பையில் பல்வேறு திரையரங்குகளில் 12 காட்சிகள் வரை திரையிடப்பட்டதாக இந்தி திரையுலகின் வர்த்தக நிபுணர் தரண் ஆதர்ஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். அமெரிக்காவில் 152 இடங்களில் திரையிடப்பட்டு சுமார் ரூ.2.31 கோடி வசூல் செய்திருக்கிறது. பிரான்ஸ் மற்றும் ஆஸ்திரேலியாவில் ‘கபாலி’ படத்தின் வசூல் சாதனையை முறியடித்திருக்கிறது ‘சர்கார்’.

கடும் எதிர்ப்பையும் மீறி
சர்கார் படத்தை வெளியிட்ட
தமிழ் ராக்கர்ஸ்

‘சர்கார்’ படத்தின் எச்.டி. பிரிண்டை விரைவில் இணையத்தில் வெளியிடுவோம் என தமிழ் ராக்கர்ஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டது.
சர்கார் படம் தொடர்பாக தமிழ் ராக்கர்ஸ் வெளியிட்டுள்ள சவாலை முறியடிப்போம் என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிக்கை வெளியிட்டது.
இந்நிலையில் கடும் எதிர்ப்பையும் மீறி தமிழ் ராக்கர்ஸ், சொன்னபடியே விஜய் நடித்துள்ள சர்கார் திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையத்தில் வெளியிட்டுள்ளது.
படம் வெளியான அன்றே சர்கார் படம் இணையதளத்தில் வெளியாகியிருப்பது படக்குழுவிற்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *