சினிமா

விஜயா புரொடக்க்ஷன்ஸ் தயாரிப்பில் “சங்கத்தமிழன்”: நாயகன் விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி நடிப்பில் விஜய் சந்தர் இயக்கியுள்ள படம் “சங்கத்தமிழன்”. பாதாள பைரவி, மாயாபஜார், மிஸ்ஸியம்மா, எம்.ஜி.ஆர் நடித்த – எங்கவீட்டு பிள்ளை, நம்நாடு, ரஜினிகாந்த் நடித்த உழைப்பாளி, கமலஹாசன் நடித்த நம்மவர் மற்றும் தாமிரபரணி, படிக்காதவன், வேங்கை, வீரம், தளபதி விஜயின் பைரவா உட்பட 60க்கும் மேற்பட்ட வெற்றிப்படங்களை தயாரித்த பழம்பெரும் பட நிறுவனம் பி.நாகிரெட்டியாரின் விஜயா புரொடக்ஷன்ஸ். பி.வெங்கட்ராம ரெட்டி வழங்க, விஜயா புரொடக்ஷன்ஸ் சார்பில் பி.பாரதி ரெட்டியின் 6 வது படம். விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை ராஷிக்கண்ணா. நிவேதா பெத்துராஜ் முதன் முதலாக ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர். இவர்களுடன் இந்த படத்தில் நாசர், சூரி, அசுதோஷ் ராணா, ரவி கிஷான், மொட்டை ராஜேந்திரன், மாரிமுத்து, ஜான் விஜய் மற்றும் ஸ்ரீமான் போன்ற நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். விவேக்-மெர்வின் ஆகியோர் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு : ஆர். வேல்ராஜ், கலை – இயக்கம் : எம். பிரபாகரன், சண்டை பயிற்சி : அனல் அரசு மற்றும் படத்தொகுப்பினை பிரவீன் கே.எல். மக்கள் தொடர்பு: ரியாஸ் அகமது. இந்தப் படத்தின் முதல் பார்வை, படத்தலைப்பு வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *