செய்திகள்

விஜயகாந்த் உருவத்தை கையில் பச்சை குத்திக் கொண்ட பிரேமலதா

Makkal Kural Official

சென்னை, பிப். 5–

விஜயகாந்த் உருவத்தை பிரேமலதா கையில் பச்சை குத்திக் கொண்டார்.

தே.மு.தி.க. தலைவரும், நடிகருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28-ந்தேதி மரணம் அடைந்தார். அவரது உடல் சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க அலுவலக வளாகத்திலேயே அடக்கம் செய்யப்பட்டது. தற்போது, அவரது நினைவிடத்திற்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் தினமும் வந்து அஞ்சலி செலுத்தி செல்கின்றனர்.

ஜனவரி 24ஆம் தேதி நடந்த விஜயகாந்த் படத்திறப்பு நிகழ்வில் வள்ளல் விஜயகாந்த் மெமோரியல் அன்னதானம் ட்ரஸ்ட் என்ற பெயரில் அறக்கட்டளை தொடங்க உள்ளதாக பிரேமலதா அறிவித்திருந்தார். இந்த நிலையில், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மறைந்து விண்ணுக்கு சென்றாலும், அவரை எப்போதும் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காக கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா வலது கையில் விஜயகாந்தின் உருவத்தை பச்சைக் குத்தியுள்ளார்.

அழகாக வரையப்பட்டுள்ள விஜயகாந்தின் உருவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. மேலும் சிரித்தப்படி விஜயகாந்த் இருக்கும் புகைப்படத்தை கையில் பச்சைக் குத்திய பிரேமலதாவின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிரேமலதாவின் இந்த அன்பும் பாசமும் ரசிகர்களையும் தொண்டர்களையும் சந்தோஷத்தில் ஆழ்த்தி உள்ளது. டாட்டூ வீடியோவுக்கு கீழ் பலர் வாவ் என்றும் சிறப்பு என்றும் கமெண்ட் போட்டு பிரேமலதாவை பாராட்டி வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *