செய்திகள்

விஜயகாந்த் உடல்நிலை; ‘‘விரைவில் நல்ல செய்தி வரும்:’’ வீடியோ வெளியிட்ட பிரேமலதா

சென்னை, நவ. 3–

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல்நிலை குறித்து அவரது மனைவி பிரேமலதா விஜயாகந்த் வீடியோ வெளியிட்டுள்ளார்.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கடந்த 18-ந்தேதி உடல்நலக்குறைவு காரணமாக நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.அவரது மார்பில் அதிக அளவு சளி தேங்கியதையடுத்து மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. இதற்கான சிகிச்சைக்காகவே விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இதைத் தொடர்ந்து விஜயகாந்தின் நெஞ்சு பகுதியில் தேங்கியுள்ள சளியை அகற்றுவதற்கான சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.

இதில் அவரது உடல்நிலையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டது. ஆனால், விஜயகாந்துக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு தொடர் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மூச்சு விடுவதற்கு விஜயகாந்த் சிரமப்பட்டு வருவதால் அவருக்கு மூக்கு வழியாக செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டதாகவும் அதில் போதிய முன்னேற்றம் ஏற்படவில்லை என்றும் தகவல் வெளியானது.

இந்நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் நலமாக இருக்கிறார், அவர் விரைவில் வீடு திரும்புவார் என பிரேமலதா விஜயகாந்த் வீடியோ ஒன்றை வெளியிட்டு விவரித்துள்ளார். மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் விஜயகாந்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், ” தேமுதிக தலைவர் விஜயகாந்த் நலமாக இருக்கிறார், அவர் விரைவில் வீடு திரும்புவார். யாரும் வதந்திகளை பரப்பவும் வேண்டாம், நம்பவும் வேண்டாம். மருத்துவமனையில் சமூகமாக அவர் சிகிச்சை பெற்று வருகிறார். வெளியில் மட்டுமே வதந்திகளால் பரபரப்பு நிலவி வருகிறது. வதந்திகளால், திரையுலகமும், குடும்பத்தினரும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகுகின்றோம். விரைவில் நல்ல செய்தி வரும்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *