கோவை, செப். 10-
திமுக கூட்டணியில் விசிக இடம்பெற்று வரும் நிலையில்தற்போது விசிக நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்கஅண்ணா திமுகவுக்கு திருமாவளவன் அழைப்பு விடுத்துள்ளது தமிழக அரசியலில் பேசும்பொருளாகி உள்ளது.
திருமாவளவன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசும்போது, மாநாட்டில் அதிமுக பங்கேற்க அழைப்பு விடுத்தது தேர்தல் அரசியில் நிலைபாட்டுக்கானது அல்ல. மது போதையை விட சாதி போதை மிக மோசமானது. சாதி மத சக்திகளோடு விசிக ஒருபோதும் இணையாது. தேர்தல் நிலைபாடு வேறு. மக்கள் பிரச்சினைகளுக்காக இணைவது வேறு. மது ஒழிப்பு குறித்து பேசும் கட்சிகள் எங்கள் மாநாட்டில் பங்கேற்கலாம் என்று கூறினார்.