சிறுகதை

விசாரணை… | ராஜா செல்லமுத்து

‘மெய்ப்பொருள் காண்பதறிவு….’

சார், கண்டிப்பா குணா கொலை செஞ்சிருக்க மாட்டான். அவன் நிரபராதி. அவனுக்கு அந்த தைரியமெல்லாம் இல்ல; அவன விட்டுருங்க’ என்று விடாப்பிடியாக பேசிக்கொண்டிருந்தனர் நண்பர்கள்.

‘ நீங்க சொல்லிட்டீங்க? ஆனா, எங்களுக்கு சந்தேகம் வருதே. போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் வரட்டும் . அதற்கு அப்புறம் என்னன்னு சொல்றோம் ‘ என்ற போலீஸ்காரர்கள் பிடி கொடுக்காமல் பேசிக்கொண்டே இருந்தனர்.

குணா எதையோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.

எனக்கு என்னமோ இந்த கொலையை இவன் தான் செஞ்சிருப்பான்னு தோணுது. இவன் முழிக்கிற மொழியே தப்பா இருக்கே’ என்று சொன்ன போது விட்டம் பார்த்தபடியே இருந்தான் குணா.

‘ பாருங்க, இவ்வளவு சொல்றோம். ஏதாவது என்ன ஏதுன்னு கேட்கிறானான்னு பாருங்க. எனக்கு என்னமோ கண்டிப்பா இந்தக் கொலையை இவன் தான் செஞ்சிருப்பான்னு எனக்குத் தோணுது ‘ என்று போலீஸ் சொன்னதும்

எந்தவிதமான சலனமும் இல்லாமல் ஆணி அடித்தது போல உட்கார்ந்திருந்தான் குணா.

‘ டேய் குணா, டேய் ‘ என்று நண்பர்கள் உசுப்பவும் ‘

‘ம்ம்’ என்று பெரிய விசும்பலோடு கேட்டான்.

‘ என்ன நடந்துச்சுன்னு சொல்றா? உன்னைய எல்லாரும் கொலைகாரன்னு சொல்கிறாங்களே ‘ அவன நீ கொலை செஞ்சியா? சொல்லுடா… சொல்லு.. என்று குணாவை கேட்க….

, இல்ல. நான் அவன கொலை செய்யல. உயிருக்கு போராடிட்டு இருந்தான். ஒரு மனிதாபிமானத்துல தான் அவன நான் காப்பாற்றினேன். ஆனா, கொஞ்ச நேரத்தில அவன் உயிரை விடுவான்னு எனக்கு தெரியாது. ஒரு உசுர காப்பாத்துனது தப்பா. சொல்லுடா சொல்லு ‘ என்று கிறுக்கனைப் போல் கத்தினான் குணா.

‘ டேய் பேசாம இருக்க மாட்ட. பண்ற தப்பையும் பண்ணிட்டு, இப்ப நடிக்கிறீயா? போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் மட்டும் வரட்டும். உன்னைய உள்ள வச்சு லாடம் கட்றேன் பாரு ‘ என்ற ஒரு போலீஸ்காரர் சொன்னார்.

‘ சார் அவன் தான் நடந்ததச் சொல்கிறானே. பெறகு ஏன் பிறகு ஏன் அவனை எப்படி அரற்றுறீங்க. உங்க மாதிரி இருக்கிற போலீஸ்னால தான் உதவி செய்ற ஆளுக கூட உதவி செய்யாம ஒதுங்கி போயிட்டு இருக்காங்க ‘ என்று குணாவின் நண்பர் ஒருவர் சொன்னதும்

‘ டேய், என்ன நக்கலா கொலை பண்ணிட்டு வந்து உட்கார்ந்திருக்கான். அவனுக்கு போயி சப்போர்ட் பண்ணிட்டு இருக்கீங்க. கொலை செஞ்சான்னு மட்டும் ஊர்ஜிதமாகட்டும். உங்க எல்லாரையும் சேர்த்து வச்சு நொக்குகிறேன் ‘ என்று பற்களை நறநறவென கடித்தார் ஒரு போலீஸ்காரர்.

போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் எப்ப வருதாம்?

இன்னும் கொஞ்ச நேரத்துல வந்திரும். வந்தா தானா தெரியும். நீங்க எல்லாரும் கம்பிக்கு வெளியே வா இல்ல கம்பிக்கு உறவான்னு ‘ என்ற போலீசின் பேச்சுக்கு குணாவுடன் உட்கார்ந்திருந்த நண்பர்கள் செவி சாய்க்கவேயில்லை.

‘ டேய் போலீஸ் டா நாங்க என்ன வேணும்னாலும் எத வேணும்னாலும் செய்வோம். மொசப் புடிக்கிற நாய் மூஞ்சிய பாத்தா தெரியாது. இவன் தப்பான ஆளு மாதிரி தான் எனக்கு தெரியுது. ஒரு போலீஸ் சொல்ல, சூளை தலை கவிழ்ந்தபடியே இருந்தான்.

கடக்கடக் என ஓடிக்கொண்டிருந்தது அந்தக்கால பேன்.

‘இங்கே வந்தாலே ஒரு மாதிரியா இருக்கே’ என்று போலீஸ் ஸ்டேஷனை பற்றி தவறாக பேசினார்கள் குணாவின் நண்பர்கள்.

போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டை எதிர்பார்த்துக் காத்திருந்தவர்களுக்கு’ பக் பக் என்று அடித்துக் கொண்டிருந்தது இதயம்.

என்ன ரிப்போர்ட் வந்திருச்சா?

‘ ஆமா ‘ என்று போலீஸ் சொல்ல, ரிசல்ட்டை கேட்க, எல்லாரும் ஆவலாகவே இருந்தனர்.

‘என்ன குணா நிரபராதி ஆகியிருவானா? இல்ல உள்ள போயிடுவானா? என்று சொல்லி காட்டி சிரித்தனர் சில போலீஸ்காரர்கள்.

அங்கு இருந்த அத்தனை பேருக்கும் பக் … பக் … என அடித்துக் கொண்டது மனது.

‘சார், கீபோர்டு என்னாச்சு?

கேட்டவர்களின் நெஞ்சு டக் டக் என அடித்துக் கொண்டிருக்கும் போது,

‘இல்ல … இல்ல … என்று அறையும் குறையுமாக பேசினார் ஒரு போலீஸ்காரர்.

‘சார் என்ன இல்ல,

‘இல்ல இல்ல, என்று மறுபடியும் அவர் சொன்னபோது,

‘ குணா தலை கவிழ்ந்தே கிடந்தான்.

சார் என்ன ஆச்சு? எங்க அடி வயிறு வலிக்குது. என்ன என்ன சீக்கிரம் சொல்லுங்க ‘ என்று கேட்ட போது

‘ குணா நிரபராதிடா. அவன் கொலை செய்யல. அவன் இறந்தது இயற்கையாகன்னு ரிப்போர்ட் வந்திருக்கு. என்றபோது…

குணாவைத் தூக்கிக் கொண்டாடினர் நண்பர்கள்.

‘ஒரு உசுரை காப்பாத்துறதுக்கு தான் அவன் பாடுபட்டிருக்கான் சார். அவன் இயற்கையாகவே தான் செத்திருக்கான். இது தெரியாம நீங்க அவனை கொலை கேஸ்ல எல்லாம் மாட்டிவிட பார்த்தீங்க. எதையும் எப்பயும் தெளிவா தெரிந்தது தான் பேசணும். அப்பத்தான் உதவிசெய்ய ஆளுங்க வருவாங்க ‘ என்று சொன்னபோது ….

போலீஸ்காரர்கள் தலைகவிழ்ந்தபடியே குணாவை விடுதலை செய்வதற்கான ஏற்பாடுகளை வேகமாக பார்க்கத் தொடங்கினார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *