இஸ்ரோ நிறுவனம் தகவல்
பெங்களூரு, ஆக. 4–
நிலவில் விக்ரம் லேண்டர் 40 செ.மீ. உயரம் வரை பறந்து மீண்டும் மெதுவாக தரையிறங்கியது என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.
விக்ரம் லேண்டரின் செயல்பாடு வருங்காலத்தில் விண்வெளி வீரர்களை நிலவில் தரையிறங்கும் திட்டத்துக்கு முன்மாதிரியாக இருக்கும். விக்ரம் லேண்டரில் உள்ள அனைத்து கருவிகளும் நன்றாக செயல்படுவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. நிலவில் விக்ரம் லேண்டர் 30 முதல் 40 செ.மீ. உயரம் வரை பறந்து மீண்டும் மெதுவாக தரையிறங்கியது.
விக்ரம் லேண்டர் தரையிறங்கிய இடத்தில் இருந்து சிறிது தூரம் உயர்த்தப்பட்டு மீண்டும் தரையிறங்கியது. “கிக் ஆன் ஸ்டார்ட்” என்ற இந்த பரிசோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. விக்ரம் லேண்டர் எங்கள் கட்டளையின் பேரில், தன்னை சுமார் 40 செமீ உயர்த்தி, 30 – 40 செமீ தொலைவில் பாதுகாப்பாக தரையிறங்கியது. அதிலுள்ள அனைத்து அமைப்புகளும் சிறப்பாக செயல்படுகின்றன என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.