செய்திகள்

விக்கிரவாண்டி தாலுகா புதிய நீதிமன்றம் கட்ட இடம்: கலெக்டர், நீதிபதி ஆய்வு

Spread the love

விழுப்புரம், மே 23–

விக்கிரவாண்டி தாலுாகாவில் புதிய நீதிமன்றம் கட்டுவதற்கான இடத்தை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை, மாவட்ட முதன்மை நீதிபதி ஆனந்தி ஆகியோர் ஆய்வு செய்தனர்.

விக்கிரவாண்டி தாலுகா புதிய நீதிமன்றம் கச்சியப்ப செட்டி தெருவிலுள்ள தனியார் மண்டபத்தில் வாடகை கட்டிடத்தில் செயல்படுகிறது. இந்த நீதிமன்றத்திற்கு நிரந்த கட்டிடம் கட்ட கடந்த மார்ச் மாதத்தில் குத்தாம்பூண்டி சாலையில் உள்ள இடத்தை கலெக்டர், கூடுதல் கலெக்டர், நீதிபதிகள் ஆய்வு செய்தனர்.

இந்நிலையில் நேற்று விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலை ஊராட்சிக்குட்பட்ட அடைகலாபுரத்தில் உள்ள அரசுக்கு சொந்தமான 4 ஏக்கர் 84 செண்ட் இடத்தை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை, மாவட்ட முதன்மை நீதிபதி ஆனந்தி, கூடுதல் கலெக்டர் ஸ்ரேயா பிசிங், திட்ட இயக்குனர் மகேந்திரன் ஆகியோர் கொண்ட குழுவினர் பார்வையிட்டனர்.

ஆர்டிஓ ராஜேந்திரன், தாசில்தார் பார்த்தீபன், பிடிஓ.,க்கள் எழிலரசு , நந்தகோபாலகிருஷ்ணன் ,இன்ஸ்பெக்டர் விஜி, சப்–இன்ஸ்பெக்டர் சீனுவாசன், தலைமை சர்வேயர் ரவி, வட்ட சார் ஆய்வாளர்கள் ரஜினி, கலா, வருவாய் ஆய்வாளர் விஜயன், விஏஓ ராஜேஷ் பாண்டியன், ஊராட்சி செயலாளர் அலமேலு, வங்கித் தலைவர் பூர்ணராவ், வி.சாலை முன்னாள் தலைவர் செங்கல்வராயன், சுரேஷ் உட்பட வருவாய் துறையினர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *