செய்திகள்

விக்கிரவாண்டியில் குடிமராமத்து பணிகள்: கலெக்டர் அண்ணாதுரை ஆய்வு

விழுப்புரம், ஜூலை 31–-

விழுப்புரம், விக்கிரவாண்டியில் நடைபெற்று வரும் குடிமராமத்துப் பணிகளை கலெக்டர் அண்ணாதுரை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வட்டத்திற்குட்பட்ட ஒரத்தூர் ஊராட்சியில் பொதுப்பணித்துறை மற்றும் நீர்வள ஆதாரத்துறை சார்பாக ரூ.19 லட்சம் மதிப்பீட்டில் மதகு சீரமைத்தல் மற்றும் நீர்வரத்து வாய்க்கால் சீரமைப்பு பணிகள் நடைபெற்றுவருவதை கலெக்டர் அண்ணாதுரை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதனைத் தொடர்ந்து கஞ்சனூர் ஊராட்சி ஏரியில் பொதுப்பணித்துறை மற்றும் நீர்வள ஆதாரத்துறை சார்பாக ரூ.43 லட்சம் மதிப்பீட்டில் மதகு சீரமைத்தல், ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் மற்றும் கரைகள் பலப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து மதகு சீரமைத்தல், கரைகளை பலப்படுத்துதல் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் உள்ளிட்ட பணிகளை துரிதப்படுத்த பொதுப்பணித்துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அண்ணாதுரை உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஜவஹர், உதவி செயற்பொறியாளர் அன்பரசு, உதவி பொறியாளர் பாலாஜி, ஞானசேகரன், விக்கிரவாண்டி வட்டாட்சியர் பார்த்திபன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *