செய்திகள்

விஐபி இண்டஸ்ட்ரீஸ் சார்பில் ‘ஹலோ ஹாலிடேஸ்’ விளம்பர தூதர்களாக சைப்–கரீனா நியமனம்

கோவை, ஏப். 15

இந்தியாவின் லக்கேஜ் தொழில் நிறுவனமான விஐபி இண்டஸ்ட்ரீஸ், தனது பிராண்டை மறு அறிமுகம் செய்வதற்கான பிரச்சாரத்தை மேற்கொள்ள உள்ளது. அதன் அடிப்படையில், ‘ஹலோ ஹாலிடேஸ்’ எனும் தலைப்பில் விஐபி தனது பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது.

இது குறித்து பேசிய விஐபி இண்டஸ்ட்ரீஸ் நிர்வாக இயக்குனர் சுதீப் கோஸ்,

”விஐபி பிராண்டின் அதே சிறந்த தரத்தில் இந்த நவீன காலக்கட்டத்துக்கு ஏற்றவாறு புதிய வடிவமைப்புகளுடன் தயாரிப்புகளை அறிமுகப்படுத்துகிறோம். எங்கள் பிராண்டை புதிய மாற்றங்களுடன் மறுஅறிமுகம் செய்வதன் மூலம் எங்கள் வாடிக்கையாளர்கள் மேலும் கச்சிதமாகப் பொருந்தும் பைகளைத் தேர்வு செய்ய முடியும்.

எங்கள் பிராண்டின் லட்சியத்தை சைப் மற்றும் கரீனா ஜோடி மேலும் பலப்படுத்துவார்கள்’’ என்றார்.

விளம்பர தூதுவர்களாக விஐபி பிராண்ட் உடன் கைகோர்த்தது குறித்து பகிர்ந்து கொண்ட பிரபல ஜோடியான சைப் அலி கான் மற்றும் கரீனா கபூர் கான், ”நம் பெற்றோர்கள் மிகச்சிறந்த விஐபி லக்கேஜ், சூட் கேஸ், பிரீப் கேஸ் உள்ளிட்டவற்றை பயன்படுத்தியதை பார்த்து வளர்ந்திருக்கிறோம். அதே பிராண்டை நாமும் பயன்படுத்துவது மிகவும் பெருமைக்குரிய ஒன்று. பயணங்களில் மிகவும் ஆர்வமுள்ள நாங்கள் இந்த விளம்பரத்தில் எங்களைதான் பிரதிபலிக்கிறோம். விஐபி பைகளுடன் அனைவரும் ஹலோ ஹாலிடேஸ் சொல்லுங்கள்’’ என்று பேசினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *