செய்திகள்

விஐடியில் ரசாயன அறிவியலில் முன்னேற்றங்கள் பற்றிய கருத்தரங்கம்

வேலூர், பிப். 9

விஐடியில் நடைபெற்ற ரசாயன அறிவியலில் முன்னேற்றங்கள் என்பது பற்றிய தேசிய கருத்தரங்கை இங்கிலாந்து நாட்டின் வார்விக் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பீட்டர் சட்லர் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

ராயல் சொசைட்டி ஆப் கெமிஸ்ட்ரி 200 ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்து நாட்டின் லண்டனில் தொடங்கப்பட்டது. இது ரசாயன ஆராய்ச்சிப் பணிகளை ஊக்குவித்து வருகிறது. ரசான அறிவியலில் ஆராய்ச்சித் திட்டங்கள், மாநாடுகள், கருத்தரங்குகள், பயிற்சிப்பட்டறைகள் மற்றும் ஆராய்ச்சி இதழ்களை வெளியிடுதல் போன்ற பணிகளை செய்து வருகிறது. மேலும் அணு ஆராய்ச்சி, செயற்கைகோள் சம்மந்தமான அறிவியல் கல்வி திட்டங்களை வழங்கி வருகிறது. பல்கலைக்கழகங்களில் ரசாயன மேம்பாட்டு சம்மந்தமான கருத்தரங்குகளை நடத்திவருகிறது.

விஐடி பல்கலைக்கழகத்தின் முன்னேற்றப்பட்ட அறிவியல் பள்ளியின் ரசாயனதுறை நாட்டில் இந்திய அறிவியல் மையம் மற்றும் ஐஐடிகளுக்கு இணையாக 15வது ரேங்க் பெற்றுள்ளது. இதுவரையிலும் 250 ஆராய்ச்சி இதழ்களை வெளியிட்டுள்ளது. இது லண்டனில் உள்ள ராயல் சொசைட்டி ஆப் கெமிஸ்ட்ரி அமைப்புடன் இணைந்து ரசாயன அறிவியலில் முன்னேற்றங்கள் என்பது பற்றிய கருத்தரங்கை நடத்தியது. இதில் ரசாயன அறிவியல் முதுகலை மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் 350 பேர் பங்கேற்றனர்.

விஐடியில் உள்ள டாக்டர் சென்னா ரெட்டி அரங்கில் நடைபெற்ற கருத்தரங்கு தொடக்க விழாவிற்கு விஐடி செயல் இயக்குநர் சந்தியா பெண்ட்ட ரெட்டி தலைமை வகித்தார். விஐடி முன்னேற்றப்பட்ட அறிவியல் பள்ளி டீன் ஏ.மேரிசாரல் வரவேற்றார். கருத்தரங்கின் நோக்கம் பற்றி கருத்தரங்கு அமைப்பாளர் பேராசிரியர் ஆர்.விஜயராகவன் விளக்கிப் பேசினார். ராயல் சொசைட்டி ஆப் கெமிஸ்ட்ரியின் வரலாறு மற்றும் அதன் சாதனைகள் பற்றி அந்த அமைப்பின் இந்திய பிரதிநிதி டாக்டர் ராஜேஷ் பரிஷ்வாத் விளக்கிக் கூறினார்.

இதில் இங்கிலாந்து நாட்டின் வார்விக் பல்கலைக்கழகத்தின் ரசாயன பேராசிரியர் பீட்டர் சட்லர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசினார். கருத்தரங்கில் பங்கேற்ற அறிஞர்கள் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பேராசிரியர்கள் கேன்சர் நோய்க்கான மருந்து கண்டுபிடிப்பு செயற்கையான உடல் உறுப்புக்கள் இயற்கையான ரசாயன உற்பத்தி தூய்மையான சுற்றுசூழலுக்கான வினை ஊக்கிகள் நவீன ரசவாதம் என்பது பற்றி விளக்கிப் பேசினார்கள். முடிவில் விஐடி ரசாயன துறை உதவி பேராசிரியை எஸ்.எல்.மஞ்சு நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *