செய்திகள்

விஐடிக்கு இந்தியாவின் சிறந்த பல்கலைக்கழகத்திற்கான விருது

வேலூர், மே. 17–
ஐரோப்பா பல்கலைக்கழங்களின் கூட்டமைப்பான யுனிகா சார்பில் இந்தியளவின் சிறந்த பல்கலைக்கழகத்திற்கான விருது விஐடிக்கு வழங்கப்பட்டது. இந்த விருதை டெல்லியில் நடைபெற்ற விழாவில் இந்தியாவிற்கான செக் குடியரசின் தூதரக அதிகாரி வழங்க துணைத்தலைவர் சங்கர் விசுவநாதன் பெற்றுக் கொண்டார்
ஐரோப்பாவின் 37 தலைநகரங்களில் உள்ள பல்கலைக்கழகளின் கூட்டமைப்பின் சார்பில் யுனிகா என்ற அமைப்பு, பெல்ஜியம் நாட்டின் தலைநகர் பிரசல்சில் இயங்கி வருகிறது. யுனிகா அமைப்பு உலகளவில் உள்ள பல்கலைக்கழகங்களில் கல்விக்கான தலைமைப் பண்பை உருவாக்கிடவும், சர்வதேச அளவில் பல்கலைக்கழகங்கள் இணைந்து உலகளாவிய உயர்கல்வி வழங்க ஆலோசனைகளை வழங்கி வருகிறது.
யுனிகா அமைப்பு ஆண்டுதோறும் உலகளவில் உயர் கல்வியை சிறப்பாக வழங்கி வரும் பல்கலைக்கழகங்களை தேர்வு செய்து விருது வழங்கி வருகிறது. யுனிகா அமைப்பின் வருடாந்திர கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.
இதில் இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்கள் உயர் கல்வியை உலகளவில் சிறப்பாக வழங்கி வருவதை யுனிகா அமைப்பு தேர்வு செய்து விஐடிக்கு விருது வழங்கியது. யுனிகா அமைப்பின் சார்பில் இந்தியாவின் சிறந்த பல்கலைக்கழகமாக விஐடியை தேர்வு செய்து அதற்கான விருதை இந்தியாவிற்கான செக் குடியரசின் தூதரக அதிகாரி எவா செம்லிகோவா வழங்க விஐடி துணைத்தலைவர் சங்கர் விசுவநாதன் பெற்றுக் கொண்டார். இந்த விழாவில் விஐடி சர்வதேச உறவுகள் இயக்குநர் விஜயகுமார், உதவி இயக்குனர் முகம்மது ருக்னுதின் காலிப் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *