செய்திகள்

வாழ அதிகம் செலவாகும் இந்திய நகரங்கள்: சென்னை 3 வது இடம்

சீனாவின் ஹாங்காங் நகரம் உலகில் முதலிடம்

டெல்லி, ஜூன் 9–

வாழ்வதற்கு அதிகம் செலவாகும் இந்திய நகரங்களில், மும்பை தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கும் நிலையில் சென்னை மூன்றாவது இடத்தில் உள்ளது.

உலக அளவில் வசிப்பதற்கு அதிக செலவாகும் நகரங்களின் பட்டியலை அமெரிக்காவை சேர்ந்த மெர்சர் என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதற்காக, 5 கண்டங்களைச் சேர்ந்த 227 நகரங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, சீனாவின் ஹாங்காங் நகரம் முதலிடத்தில் உள்ளது.

இந்திய நகரங்களின் இடம்

இந்தப் பட்டியலில் இந்தியாவில் பொருளாதார தலைநகரமான மும்பை 147-வது இடத்தில் உள்ளது. அதற்கு அடுத்தபடியாக, தலைநகர் டெல்லி 169 வது இடத்திலும், சென்னை 184 வது இடத்திலும் உள்ளன. பெங்களூரு 189 வது இடத்திலும், ஐதராபாத் 202 வது இடத்திலும், கொல்கத்தா 211-வது இடத்திலும் உள்ளன.

மேலும், இடம், வீடு, போக்குவரத்து, உணவு, ஆடைகள், வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுக்காக அதிகம் செலவிடப்படும் நகரங்களில், ஹாங்காங், சிங்கப்பூர், சூரிச் நகரங்கள் முறையே முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளன.

இந்தியாவை பொறுத்தவரை மும்பை முதலிடத்தில் உள்ளது.

இதற்கு அடுத்தபடியாக சென்னை, ஐதராபாத், கொல்கத்தா, புனே ஆகிய நகரங்கள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.

மேலும், மும்பை நகரை விட எஞ்சிய நகரங்களில் ஆகும் செலவு 50 சதவீதத்துக்கும் குறைவு என்று புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *