மஞ்சள் வாழைப் பழத்தின் மேல் தோலை உரித்து அப்பழத்துடன் கொஞ்சம் சீரகத்தை சேர்த்து நன்றாக பிசைந்து காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் ரத்தமூலம் முற்றிலும் குணமாகும். மேலும் உடலில் இருக்கும் தேவையற்ற கெட்ட கொழுப்புக்கள் கரைந்து உடல்எடை குறைந்து ஆரோக்கியம் மேலோங்கும்.
திராட்சைப்பழச்சாறுடன், சிறிது சீரகத்தைப் பொடித்திட்டு, பருகினால், ஆரம்பநிலை ரத்த அழுத்த நோய் குணமாகும். மத்தியதர ரத்த அழுத்த நோய் இருப்பவர்களுக்கு, மேலும் ரத்த அழுத்தம் அதிகரிக்காது தடுக்கும்.
சிறிது சீரகம், மிளகுபொடியை எண்ணெயிலிட்டுக் காய்ச்சி, அந்த எண்ணெயை தலையில் தேய்த்துக் குளித்தால், கண் எரிச்சல், கண்ணிலிருந்து நீர்வடிதல் நீங்கும்.
அகத்திக்கீரையுடன், சீரகம், சின்னவெங்காயம் சேர்த்து கஷாயம் செய்து அத்துடன் கருப்பட்டி பொடி இட்டு சாப்பிட்டால், மனஅழுத்தம் மாறும். ஆரம்பநிலை மனநோய் குணமாகும்.
சீரகம், சுக்கு, மிளகு, தனியா, சித்தரத்தை இவ்வைந்தையும் சேர்த்துத் தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் இரண்டு சிட்டிகை வீதம், தினம் இரண்டு வேளையாக சாப்பிட்டால், உடல்அசதி நீங்கி, புத்துணர்ச்சி ஏற்படும்.
சீரகத்தை லேசாக வறுத்து, அத்துடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டு வர, நரம்புகள் வலுப்பெறும். நரம்புத்தளர்ச்சி குணமாகும்.
சிறிது சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நான்கு நல்ல மிளகு சேர்த்து மென்றுதின்று, ஒருடம்ளர் குளிர்ந்த நீர் பருகினால், வயிற்றுப் பொருமல் வற்றி, நலம் பயக்கும்.
சீரகத்துடன், மூன்று பற்கள் பூண்டு வைத்து மைய்ய அரைத்து, எலுமிச்சை சாறில் கலந்து குடித்தால், குடல் கோளாறுகள் குணமாகும். ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் செய்து, சாப்பிட்டால், அதிக பேதி போக்கு நிற்கும்.
பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் நோய்க்கு, சிறிது சீரகத்துடன் சின்ன வெங்காயம் வைத்து மைய்ய அரைத்து, பசும்பாலில் கலந்து குடித்து வர, நல்ல பலன் கிடக்கும். சிறிது சீரகத்துடன், கீழாநெல்லி வைத்து அரைத்து, எலுமிச்சை சாறில் சேர்ததுப் பருகி வர, கல்லீரல் கோளாறு குணமாகும்.
சீரகத்தை தேயிலைத் தூளுடன் சேர்தது கஷாயம் செய்து குடித்தால் சீதபேதி குணமாகும். கொஞ்சம் சீரகமும் திப்பிலியும் சேர்த்துப் பொடித் தேனில் குழைத்து சாப்பிட்டால், தொடர்விக்கல் விலகும்.
மஞ்சள் வாழைப்பழத்துடன், சிறிது சீரகம் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும். நாம் சமையலறையில் ஒரு மருத்துவமனையை வைத்துக்கொண்டு நாம் ஏன் வீட்டைவிட்டு தொலைதூரத்தில் இருக்கும் மருத்துவமனைக்கு செல்கிறோம் என்றுதான் தெரியவில்லை.