நல்வாழ்வுசிந்தனை
நாம் அன்றாடம் சாப்பிடக்கூடிய உணவுகளில் பல வகை உணவுகள் உள்ளது.
நமது நாவிற்கு சுவை தரக்கூடிய பலவகை பூ, காய்கறிகள் , பலவகைககள் தினசரி உணவில் சேர்த்துக் கொள்கிறோம்.
அவ்வாறு சுவை நிறைந்த பூ வகைகளில் ஒன்றான வாழைப்பூவின் நண்மைகளை பற்றி தெரிந்து கொள்வோம். ரத்தசோகை இரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையானது அதிக அளவில் இருக்கும் பட்சத்தில்தான் ரத்தசோகை குறைபாடு ஏற்படாது.
ஆனால் சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறையும் பட்சத்தில் இரத்த சோகை ஏற்படுகிறது.
இந்தக் குறைபாடானது பருவ வயதினர், குழந்தைகள் ஆகியவர்களிடம் அதிக அளவில் உள்ளது.
ரத்த சோகை பிரச்சினை உள்ளவர்கள் வாரத்தில் ஒருமுறையேனும் வாழைப்பூ சமையல் செய்து சாப்பிட்டு வர வேண்டும்.
ஒரு சிலருக்கு வாய் துர்நாற்றம் இருக்கும். இந்த பிரச்சனை உள்ளவர்கள் வாழைப்பூவை அடிக்கடி சமையலில் சேர்த்து வரும்போது வாய் துர்நாற்றத்தில் இருந்து விடுபடலாம்.
ஈறுகளில் வீக்கம், சொத்தைப் பற்கள், ஈறுகளில் ரத்தம் வடிதல் போன்ற பிரச்சனைகள் ஊட்டச்சத்து குறைபாட்டினால் ஏற்படுகின்றது.
–