வாழ்வியல்

வாழைப்பழம் சாப்பிட்டால் வாய்ப் புண் குணமாகும்

ரிபோப்ளேவின் எனப்படும் பி 2 குறைபாட்டால் நாக்கு வீக்கம், வாய் ஓரத்தில் புண் ஏற்படும். இந்த வைட்டமின் பால் பொருட்கள், வாழைப்பழம், பச்சை வாழைப்பழம் இவற்றில் கிடைக்கும்.

நியாசின் எனப்படும் பி3 சரும பாதுகாப்பு, ஜீரண செயல்பாடுமுறை, கெட்ட கொழுப்பு நீக்குதல் போன்றவற்றை கொடுக்கும். ஆயினும் அதிகம் உட்கொண்டால் கல்லீரல் பாதிப்பு ஏற்படும்.

அசைவம், மீன், முட்டை, காய்கறி இவற்றில் பி 3 வைட்டமின் சத்து கிடைக்கும். பன்டோதினிக் ஆசிட் எனப்படும் பி 5 வைட்டமின் உடல் உணவிலிருந்து சத்து எடுத்துக் கொள்ள உதவும்.

சில ஹார்மோன்கள், கொலஸ்டிரால் உருவாக்கவும் உதவுகின்றது. குறைபாடு ஏற்படும் பொழுது பராஸ்திஷியா என்ற பாதிப்பு ஏற்படும்.

வைட்டமின் பி5 அதிகமானால் வயிற்றுப் போக்கு, வயிறு பிரட்டல், நெஞ்நெரிச்சல் பி5 சத்து அசைவ உணவு, மீன், முட்டை, காய்கறி இவற்றிலிருந்து கிடைக்கின்றது.பிரிடாக்ஸின் எனப்படும் பி6 வைட்டமின் சத்து உடலின் ரசாயன மாற்றங்களுக்கு உதவுகின்றது.

இரத்த சோகை இதன் குறைபாட்டால் ஏற்படும். இந்த சத்து அதிகமானால் நரம்பு பாதிப்பு ஏற்படும். அசைவம் காய்கறி, கொட்டைகள், வாழைப்பழம் இவற்றில் பி6 வைட்டமின் சத்து கிடைக்கிறது.பயோடின் எனப்படும் பி7 வைட்டமின் சத்தில் குறைபாடு ஏற்பட்டால் சரும பாதிப்பு, குடல் பாதிப்பு ஏற்படும். முட்டை, கடலை, கீரை இவற்றில் எளிதாய் இச்சத்து கிடைக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *