ஒரு மாதம் தொடர்ந்து நடைப்பயிற்சியை மேற்கொண்டால், கால் வலி உடல்வலி வராது
நல்வாழ்வுச் சிந்தனைகள்
வலிக்கான காரணங்கள் என்ன?
* எலும்பு மூட்டு இணைப்புக்களில் காயங்கள்
* தசை அல்லது தசைநார்களில் கிழிசல்
* இரத்த உறைவு, மோசமான இரத்த ஓட்டம்
* வெரிகோஸ் வெயின் அல்லது சுருள் சிரை நரம்பு
* எலும்பு தேய்மானம் கால் வலிக்கான அறிகுறிகள் என்ன?
* கால்கள் மற்றும் முதுகுத்தண்டின் கீழ் பகுதியில் உணர்வின்மை
* கால் தசைப் பிடிப்புக்கள்
* சர்க்கரை நோய் காரணமாக நரம்பு சேதத்தால் ஏற்படும் கூச்ச உணர்வு
* நழுவிய வடுக்களால் ஏற்பட்ட நரம்பு சேதம் உடனே மருத்துவரை அணுக வேண்டியவர்கள்:
* நடந்தாலோ அல்லது அசைந்தாலோ கடுமையான வலியை உணர்பவர்கள்
* என்ன தான் மருந்து மாத்திரைகளை எடுத்தாலும் தாங்க முடியாத வலியை உணர்பவர்கள்
* இரண்டு கால்களும் உணர்வின்றி மரத்து போயிருப்பவர்கள் கால் வலிக்கான இயற்கை வைத்தியங்கள்.
* ஒரு வாளியில் வெதுவெதுப்பான நீரை நிரப்பி, அதில் 1 கப் எப்சம் உப்பு சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.
* அதில் இரண்டு கால்களையும் 15-20 நிமிடம் ஊற வையுங்கள்.
* இந்த முறையை தினமும் 2 முறை என ஒரு வாரம் தொடர்ந்து செய்து வர, கால் வலி குறையும். எலுமிச்சை சாறு மற்றும் விளக்கெண்ணெய்
* 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றுடன், 2 டேபிள் ஸ்பூன் சுத்தமான விளக்கெண்ணெய் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் இந்த கலவையை வலியுள்ள கால் பகுதிகளில் தடவி 5 நிமிடம் நன்கு மசாஜ் செய்ய வேண்டும்.
* பின்பு 2 மணிநேரம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரால் கால்களைக் கழுவ வேண்டும்.
* இப்படி தினமும் 2 முறை என வலி போகும் வரை செய்யுங்கள். சூரிய வெளிச்சம்
* கால் வலியால் கஷ்டப்படுபவர்கள் வைட்டமின் டி நிறைந்த உணவை அதிகம் சாப்பிட வேண்டும்.
* முக்கியமாக அதிகாலை சூரிய வெளிச்சம் உடலில் படுமாறு சிறிது நேரம் நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
* இப்படி ஒரு மாதம் தொடர்ந்து நடைப்பயிற்சியை மேற்கொண்டால், கால் வலி வருவது குறையும். பொட்டாசியம் உணவுகள்
* தினமும் 2 வாழைப்பழத்தை சாப்பிடுங்கள். சர்க்கரைவள்ளிக் கிழங்கை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
* உலர் திராட்சை, ப்ளம்ஸ், நட்ஸ் மற்றும் தக்காளி ஜூஸ் குடியுங்கள்.
* ஏனெனில் பொட்டாசியம் நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்வதன் மூலம், கால் வலி வருவது தடுக்கப்படும். இதனால் தான் மருத்துவர்களும் கால் வலிக்கு பொட்டாசிய மருந்துகளை பரிந்துரைக்கிறார்கள்.