செய்திகள்

வாழப்பாடி அருகே வேன் மீது லாரி மோதி விபத்து: 3 பேர் பலி

வாழப்பாடி, நவ. 30–

வாழப்பாடி அருகே புறவழிச்சாலையில், வேன் மீது பார்சல் லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில், வேனில் பயணித்த 3 பேரும் உடல் நசுங்கி பலியானார்கள்.

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே, சென்னையில் இருந்து சேலம் நோக்கி, சேலம்-சென்னை புறவழிச் சாலையில் வாழப்பாடி கிழக்குக்காடு அருகே இன்று காலை 7 மணியளவில் ஒரு பிக்கப் வேன் வந்து கொண்டிருந்தது. அப்போது, சேலத்தில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற பார்சல் லாரி, வேன் மீது எதிர்பாரத விதமாக நேருக்கு நேராக மோதியதில் வேனின் முன்பகுதி அப்பளமாய் நொறுங்கியது.

3 பேர் பலி

இந்த விபத்தில் வேனை ஓட்டி வந்த விழுப்புரத்தைச் சேர்ந்த பிரவீன்குமார் மற்றும் அவரோடு பயணித்த அரக்கோணம் சுதர்சன், குடியாத்தம் பிரகாசம் உள்ளிட்ட 3 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள்.

இது குறித்து தகவலறிந்த வாழப்பாடி போலீசார், தீயணைப்பு படையினர் மற்றும் சுங்கச்சாவடி பணியாளர்கள் ஒன்றிணைந்து, கிரேன் இயந்திரத்தை பயன்படுத்தி, வேனில் சிக்கி இருந்த 3 பேரின் உடல்களையும் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தில் பார்சல் லாரி ஓட்டுநரான திருநெல்வேலியைச் சேர்ந்த பேச்சிமுத்து பாண்டியன், படுகாயத்துடன் வாழப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வாழப்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு ஹரிசங்கரி, இஸ்பெக்டர் உமாசங்கர் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தால், சேலம் – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *