செய்திகள்

வாலிபர் கொலை: உடனிருந்த இன்னொருவருக்கு போலீஸ் வலைவீச்சு

சென்னை, ஜூலை.8–

ஐயப்பன் தாங்கல் அருகே வாலிபர் மர்மமாகக் கொலை செய்யப்பட்டார்.அவர் உடனிருந்த இன்னொருவர் தப்பி ஓடிவிட்டார். அவரைப் போலீஸ் தேடிவருகிறார்கள்.

ஐயப்பன் தாங்கல் அருகே உள்ள கொளுத்துவாய்ச்சேரியில் கார் டிரைவராக வேலை பார்த்துவந்தவர் பாலசுப்பிரமணியின் மகன் பிரகாஷ் ராஜ் வயது 29 . அவர் தன் நண்பர் கார்த்தியுடன் வந்து இருவரும் வீட்டில் மது குடித்துக்கொண்டிருந்தார்களாம். அப்பா பாலசுப்பிரமணி சாப்பாடு வாங்க வெளியே போய்விட்டுத் திரும்பி வந்து பார்த்தார். மகன் உடலில் பல இடத்தில் காயங்களுடன் இறந்து கிடந்தார். நண்பர் கார்த்தியைக் காணவில்லை.

இந்த கொலை பற்றி பாலசுப்பிரமணி போலீசில் புகார் கொடுத்தார். கோயம்பேடு போலீஸார் வழக்குப் பதிவு செய்து கொலையாளியைத் தேடிவருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *