செய்திகள்

வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் தங்க சனீஸ்வரர், ஸ்ரீலக்ஷ்மி வராஹர் ஆலய கும்பாபிஷேகம்

Spread the love

வேலூர், ஜூன் 15

வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் பாதாள சொர்ண சனீஸ்வரருக்கும், ஜெய மங்கள சனீஸ்வரருக்கும், லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வேண்டும் வரங்கள் தரும் லக்ஷ்மி வராஹருக்கும் மங்கள வேத பாராயணத்துடன் வாத்தியங்கள் முழங்க மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

பக்தர்களுக்கு பீடாதிபதி முரளிதர ஸ்வாமிகள் அருளாசி வழங்கினார்.

இதில் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் முன்னிலையில் 10க்கும் மேற்பட்ட சைவ வைணவ ஆச்சார்யர்கள் பங்கேற்று காலை 6 மணி முதல் 10 மணி வரை 4ம் கால அவப்ருத யாக பூஜையுடன் கோ பூஜை, விஸ்வரூப தர்சனம், சங்கல்பம், மூலிகை திவ்யாஹுதி, சனீஸ்வர சாந்தி ஹோமம், பூர்ணாஹுதி, மஹா தீபாராதனை, யாத்திரா தானம் செய்யப்பட்டு கடம் புறப்படுதல் நடைபெற்றது.

லக்ஷ்மி வராஹர் கோபுரம், ஜெய மங்கள சனீஸ்வரர் கோபுரம், சொர்ண சனீஸ்வரர் கோபுரம், ஸ்ரீ லக்ஷ்மி வராஹர் மூலவர் சம்ப்ரோக்ஷணம், ஸ்ரீ ஜெய மங்கள சனீஸ்வரர் ஸ்ரீ சொர்ண சனீஸ்வரர் ஆகியவற்றுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதில் எராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

அதன் பின்னர் மகா அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.

இதனைதொடர்ந்து ஜலஜா கோபாலகிருஷ்ணன் குழுவினரின் தொடர் பக்தி பாராயண நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட கலெக்டர் எஸ்.ஏ.ராமன், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்எம்டி. டீக்காராமன், தேசிய பசுமை தீர்ப்பாய நீதிபதி பி.ஜோதிமணி, சென்னை போரூர் ரமணா இண்டஸ்ட்ரீஸ் குணசேகரன், வேலூர் துர்காபவன் ஹோட்டல் உதயசங்கர், ஆதித்ய குருஜி, பெங்களூர் திருசங்கமேஸ்வரன், பெங்களூர் ஸ்ரீனிவாசமூர்த்தி, சச்சின் குமார், புலியூர் பாலு, சென்னை டாக்டர். ரங்கராஜன் ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தார்கள். பக்தர்களுக்கு பீடாதிபதிமுரளிதர ஸ்வாமிகள் அருளாசி வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *