ஊட்டச்சத்து குறைபாட்டை நீக்க வாரத்தில் ஒரு முறையேனும் வாழைப்பூ சாப்பிட்டு வரவேண்டும். மூலம்
மலச்சிக்கல் காரணமாக மூலம் ஏற்படுகின்றது. அதுமட்டுமில்லாமல் ஒரே இடத்தில் அமர்ந்து பணி புரிபவர்களுக்கு மூலம், பவுத்திரம் போன்ற நோய்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம்.
வாழைப் பூவானது மூலம் பிரச்சனையை சரிசெய்ய பெரிதும் உதவுகின்றது.
வாழைப்பூவில் உள்ள நார்ச்சத்துக்கள் மலச்சிக்கல் பிரச்சனையை சரி செய்கின்றது. மேலும் மூலத்தினால் உண்டான புண்கள் குணமடைய வழிவகுக்கின்றது. வயிற்றுப்போக்கு
வயிற்றுப்போக்கு ஆனது உடலுக்கு சேராத உணவுகளை சாப்பிடுவதாலும், அழுகிய கெட்டுப்போன உணவுப் பொருட்களை சாப்பிடுவதால் வயிற்றுப் போக்கு ஏற்படுகின்றது.
இந்த வயிற்றுப் போக்கின் காரணமாக உடலின் ஒரு சில அத்தியாவசியமான சத்துக்கள் இழப்பு ஏற்படுகின்றது.
வயிற்றுப்போக்கு நின்ற பின்னர் வாழைப்பூ சாப்பிட்டு வருவதன் மூலமாக நாம் இழந்த சத்துகளை நம் உடலுக்கு மீண்டும் கொடுக்கும்.