செய்திகள் போஸ்டர் செய்தி

கொரோனாவுக்கு எதிரான 21 நாள் போரில் வெற்றி பெறுவோம்: மோடி உறுதி

Spread the love

கொரோனாவுக்கு எதிரான போர் 21 நாட்கள்

வாரணாசி மக்களுடன் பிரதமர் மோடி பேச்சு

 

புதுடெல்லி, மார்ச்.26-

வாரணாசி தொகுதி மக்களுடன் காணொலி காட்சி மூலமாக பேசிய பிரதமர் மோடி, “மகாபாரத போர் 18 நாட்கள் நடந்ததாகவும், கொரோனாவுக்கு எதிரான போர் 21 நாட்கள் நடக்கிறது” என்றும் குறிப்பிட்டார்.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் கடந்த 19-ந்தேதி நாட்டு மக்களுடன் உரையாடிய பிரதமர் மோடி 22-ந்தேதி மட்டும் மக்கள் தாங்களாகவே ஊரடங்கை கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொண்டார். அதன்படி நாடு முழுவதும் அன்று ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது.

இதையடுத்து 2-வது முறையாக நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி தொலைகாட்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றியபோது, 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவித்தார்.

இந்தநிலையில் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்த பின்னர் நேற்று உத்தரபிரதேசத்தில் உள்ள தனது தொகுதியான வாரணாசி மக்களுடன் காணொலி காட்சி மூலமாக பிரதமர் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் நோயாளிகளைக் கையாளும் டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் விமான நிலைய ஊழியர்களை மக்கள் ஒதுக்கி வைப்பது வேதனை அளிக்கிறது.

கொரோனா வைரசுக்கு ஏழை, பணக்காரன் தெரியாது. எனவே மக்கள் வீட்டிலேயே இருங்கள். மகாபாரத போர் 18 நாட்கள் நடந்தது. கொரோனா வைரசுக்கு எதிரான போர் 21 நாட்கள் நடக்கிறது. இந்த போரில் வெற்றி பெறுவதே நம் நோக்கம்.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *