செய்திகள்

வாரணாசியில் 7 வகை கொரோனா: சிசிஎம்பி ஆய்வு மையம் தகவல்

டெல்லி, ஜூன் 5–

உத்திப்பிரதேசம் மாநிலம், வாரணாசியில் ஏழு வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சிசிஎம்பி நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை, தீவிரமடைந்துள்ள நிலையில், அதனைக் கட்டுபடுத்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையில், உத்தரபிரதேச மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், செல்லுலார் மற்றும் மூலக்கூறு உயிரியலுக்கான மையம் சார்பில் (Centre for Cellular and Molecular Biology) வாரணாசி பகுதியில் கொரோனா பாதித்த 130 பேரைக் கொண்டு சில ஆய்வுகள் நடத்தியது.

இந்நிலையில், வாரணாசியில் உருமாறிய ஏழு வகை கொரோனா வைரஸ் வகைகள் கண்டறியப்பட்டுள்ளதாக சிசிஎம்பி நிறுவனம் நடத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், இந்த உருமாறிய ஏழு வகை கொரோனா வைரஸ்களில், ஏற்கனவே உலக சுகாதார நிறுவனம் தெரிவித்த டெல்டா மற்றும் பீட்டா வகை வைரஸ்களும் அடங்கும் என்று ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆய்வு நடத்தப்பட்ட கொரோனா நோயாளிகளில் 35 சதவிகிதம் பேருக்கு டெல்டா வகை வைரஸ் இருப்பதாகவும், தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட B1351 வகை கொரோனா வைரஸ்கள் வாரணாசியில் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *