சிறுகதை

வாய்ப்பேச்சு | ராஜா செல்லமுத்து

‘பது சார், எங்க சாப்பிடலாம்?

நீங்களே சொல்லுங்க’

‘வெஜ்ஜா, நான்வெஜ்ஜா?’

‘ஏதாவது ஒண்ணு’ என்ற பதுவின் பதில் மகேஷுக்குள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது.

‘ஓ.கே. நான்வெஜ் சாப்பிட வேண்டியது தான்’ என்ற முடிவோடு இருவரும் முன்னேறினார்கள்.

குமார் வருவானா?

‘கேளுங்க’ என்ற பதுவின் குரலைக் கேட்ட உடனே மகேஷ், குமாருக்கு போன் செய்தான்.

‘என்ன குமார்’ சாப்பிட வாரீயா?

‘எங்க?’

‘இங்க தான் பக்கத்தில’

‘ஓகோ, வெஜ்ஜா, நான்வெஜ்ஜா?’

‘நான்வெஜ்’

‘அப்பிடின்னா ஓ.கே. ஒடனே வாரேன்’ என்ற குமார் அடுத்த சில நிமிடங்களில் பது மகேஷ் இருக்கும் இடத்திற்கு விரைந்தான்.

‘நான்வெஜ்ன்னா… நம்ம குமாருக்கு தொண்டையில எச்சில் ஊத்தா ஊறுமே’

‘வரட்டும், எந்த ஓட்டல்ன்னு கேப்போம்’ என்ற இருவரும் அவனுக்காகக் காத்திருந்தனர்.

குமார் வேக வேகமாக வந்தான்

‘என்ன போகலாமா?’

‘ஓ.கே.’

‘நான்வெஜ் தானே’

‘ஆமா’ என்று சொன்னதும் குமார் தொண்டை வரை வாயைப் பிளந்து ‘வாங்க’ சீக்கிரம் போகலாம் என்று துடித்தான்.

‘சரி எங்க?’

‘வாங்க’ மூவரும் டூவிலரில் விரைந்தனர்.

‘அப்படி இப்படியென்று ஒரு நான்வெஜ் ஓட்டலைத் தேர்ந்தெடுத்தனர்.

‘இது எப்பிடி இருக்கும்’

‘இங்க ரொம்ப நல்லாயிருக்கும் என்ற மூவரும் அந்த ஓட்டலுக்குள் நுழைந்தனர்.’

‘என்ன சாப்பிடலாம்’

‘நீங்களே சொல்லுங்க’ என்ற பது அமைதியாய் உட்கார்ந்திருந்தார்.

சரி குஸ்கா வாங்கிட்டு, சை டிஷ் ஏதாவது வாங்கிக் கிரலாமா?

‘ஓ.கே.’ என்ற மூவரும் குஸ்காவுக்கு ஆர்டர் கொடுத்தனர்.

‘ஏய்…. ஒவ்…ஒவ்…ஒவ்…ஒவ்…’ என்று பேசியபடியே ஒரு பேசதாவன் வந்தான்.

‘ஒவ்…ஒவ்…ஒவ்…’ என்று தன் பாஷையில் ஆர்டர் கேட்டான்.

என்னது இது தான் ஆர்டர் கேக்குறதா?

இவருகிட்ட எப்பிடி ஆர்டர் குடுக்கிறது. சொன்னா கொண்டு வந்திருவானா? என்பறடியே குஸ்கா, மீனு, சிக்கன் 65’ கொண்டு வா பாப்போம் என்று மூவரும் இறுமாந்து இருந்தனர்.

‘ஹலோ அவர தப்பா நெனைக்காதீங்க. அவரு வாயி தான் அப்பிடி. ஆனா கொஞ்சங்கூட தப்பில்லாம நீங்க ஆர்டர் பண்ணுறத கொண்டு வருவாரு. இப்ப பாருங்க, அவரு என்ன செய்றான்னு’ என்று பேசுவதற்குள், அந்த பேசாதவன் இவர்கள் கொடுத்த ஆர்டர்களையும் அடுத்த ஆர்டர்களையும், அடுக்கிக் கொண்டு வந்தான்.

‘ஆகா, பயங்கரமான ஆளா இருப்பான போல. பேச்சு தான் வரலன்னு நெனைச்சிட்டு இருந்தோம். ஆனா இவ்வளவு தெளிவா கொண்டு வாரானே’ என்ற மூவரும் வாய் பிளந்து உட்கார்ந்திருந்த போது ஒவ்…ஒவ்… ஒவ்… என மீண்டும் தன் குரலில் கேட்டான்.

‘தம்பி மூணு ஆம்லெட்’

‘ஒவ்…ஒவ்…’ என்று ஆமோதித்தபடியே அந்த பேசாதவன் போனான். போன சிறிது நேரத்தில் ஆம்லெட்டுடன் வந்தான்.

ஒரு ஓட்டலுக்கு ஆர்டர் கேக்குறது, பொருளக் குடுக்கிறது, எல்லாமே பேச்சு தான். ஆனா இவனப் பாத்தீங்களா பேசுறதே புரியல. பேச்சு சுத்தமா வரல. ஆனா எவ்வளவு கரைக்டா கொண்டு வாரான்னு பாரு’ என்று மூவரும் பேசிக் கொண்டிருக்கும்போது ஒருவன் முன்னால் வந்தான்.

இந்த ஓட்டலுக்கு நீங்க புதுசா?

‘ஆமா’

‘அதான் இவனப் பத்தித் தெரியல’

இவன் வாய் பேசாதவன் தான். ஆனா சொல்றத கரைக்டா செய்வான்’ கிட்டத்தட்ட இந்த ஓட்டல 10 வருசத்துக்கு மேல இருக்கான்’ வாய் பேசிட்டு பொய்சொல்லிட்டு இருக்கிறவனுகளைவிட வாய் பேசாத இவன் எவ்வளவோ பெருசுங்க’

நீங்க சொல்றதுல இன்னொரு உண்மையும் இருக்கு என்றான் வேறொருவன்.

‘என்ன? என்றார் பது’

‘இப்பவெல்லாம், ஓட்டல்கள்ல வெளி மாநிலத்துக்காரனுக தான் நெறயா வேல செஞ்சிட்டு இருக்கானுக. அவனுகிட்ட நாம பேசுறதும் ஒண்ணு தான்; பேசா பொய் சொல்லிட்டு ஒண்ணு தான்; அதுக்கு, வாய் பேசாத நம்ம ஆளே பரவாயில்ல’ என்று ஒருவர் சொல்ல ……

ஒவ்…ஒவ்…ஒவ்… என ஆர்டரை வாங்கிக் கொண்டிருந்தான் அந்தப் பேசாதவன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *