செய்திகள்

வாய்ப்பு மறுக்­கப்­பட்ட மாண­வர்­க­ளுக்­கு 25% ஒதுக்­கீடு: சிறு­பான்­மை­யற்ற தனியார் சுய­நி­தி பள்­ளி­களில் சேர்க்கை துவங்­கி­ய­து

சென்னை, ஆக. 27

சென்னை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் 2020–-2021–ம் கல்வியாண்டிற்கு உரிய மாணவர் சேர்க்கையில் குழந்தைகளுக்கான கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 மற்றும் தமிழ்நாடு குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமை விதிகள் 2011–ன்படி வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினர் குழந்தைகளுக்கு குறைந்தபட்சம் 25% ஒதுக்கீட்டின்படி மாணவர்கள் சேர்க்கை இன்று (27–ந் தேதி) முதல் 25.9.2020 வரை நடைபெறவுள்ளது.

25% ஒதுக்கீட்டின்படி சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் பெற்றோர்கள் அவர்தம் குழந்தைகளின் விண்ணப்பங்களை rte.tnschools.gov.in என்ற இணையத்தில் பதிவேற்றம் செய்திடலாம் அல்லது விண்ணப்பிக்கும் பள்ளியின் வாயிலாக பதிவேற்றம் செய்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பள்ளியில் பெறப்பட்ட விண்ணப்பங்களை பள்ளியில் பதிவேற்றம் செய்வது சார்பாக எதிர்பாராத இடர்பாடுகள் ஏற்படின் சென்னை மாவட்ட கல்வித்துறை சார்பாக அமைக்கப்பட்டுள்ள 27 மையங்களை தொடர்பு கொண்டு பதிவேற்றம் செய்திடலாம் என்ற விவரம் பெற்றோர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

இத்தகவலை சென்னை மாவட்ட கலெக்டர் சீத்தாலட்சுமி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *