நல்வாழ்வுச்சிந்தனை
வாழைப்பூ இன்றியமையாத மருந்துவ குணம் கொண்ட உணவுப் பொருள்.
வாழைப்பூ சாப்பிட்டால் மனிதனுக்கு ஏற்படும் வாயுத்தொல்லை, செரிமானக் கோளாறுகள், வயிற்றுப்புண் ஆகியவை குணமாகும் . 15 நாட்கள் வாழைப்பூவை சமைத்து சாப்பிட்டால் மூலநோய், இரத்தம் வெளியேறுதல், மூலப் புண்கள், மலச்சிக்கல், சீதபேதி போன்றவற்றை குணப்படுத்திவிடும் .
பெண்களை வாட்டி வதைக்கும் கர்ப்பப்பை கோளாறுகள், வெள்ளைப்படுதல், மாதவிடாய் கோளாறுகள், உடல் சோர்வு போன்றவற்றிற்கு இது மிகச்சிறந்த மருந்தாக அமையும் உணவு.
வாய்துர்நாற்றம் நீங்கவும் வாய்ப்புண்கள் ஆறவும் வாழைப்பூவை சமைத்து சாப்பிட்டால் உடனடியாக சீராகிவிடும்.
இந்த வாழைப்பூ சமைத்துச் சாப்பிட்டால் அநேக உடல் நலக்கோளாறுகளும் குணமடையும்.
வயிறு கோளாறு உள்ள ஆடு மாடுகளுக்கு கூட இது தான் மருந்தாக இருக்கிறது. இது பற்றிய நன்மை தெரிந்தவர்கள் தினந்தோறும் இதனை உணவிற்கு பயன்படுத்துவார்கள்.
வாழைப்பூவை சமைத்து சாப்பிட்டு அதன் நன்மைகளைத் தெரிந்து கொண்டால் யாரும் மருத்துவமனையைத் தேடிச்செல்ல வேண்டிய அவசியமே இல்லை!.