சிறுகதை

வாட்ஸ்அப் வீடியோ |ராஜா செல்லமுத்து

ஜெய் தன்னுடைய செல்போனில் இளையராஜா பாடல்களை கேட்டுக்கொண்டே இருந்தான். அந்த பாடல்களில் லயித்து கண்களை மூடியபடி ரசித்துக் கொண்டிருந்தான்

அப்போது அவனுக்கு ஒரு வீடியோ கால் வந்தது . வீடியோ காலில் பேசியவள் ராஜேஸ்வரி

ஹலோ எப்படி இருக்கீங்க? என்று இனிப்பு தடவிய குரலில் பேசினான் ஜெய்…

‘‘நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க?’’ என்றான் .

நான் நல்லா இருக்கேன் என்றாள் ராஜேஸ்வரி

அப்போது ஜெய்யுடன் இருந்த கிருஷ்ணா

யார் கூட பேசுறீங்கா? என்று சைகையால் கேட்டான்.

ஒரு பெண்ணுடன் என்று ஜெய் சொல்ல அவனுக்கு சந்தோஷம் தாங்கவில்லை .

நானும் பேசுறேன். எனக்கும் அறிமுகப்படுத்தி வையுங்கள் என்று கிருஷ்ணா கேட்டான்.

வீடியோ காலை திருப்பிய ஜெய்

என் பிரண்டு கூட பேசுவீங்களா? என்று கேட்டான்.

யாரு உங்க பிரண்டு என்று ராஜேஸ்வரி கேட்டாள்.

இந்த இவன் தான் கிருஷ்ணா என்று தன் நண்பனை வீடியோ காலில் அறிமுகம் செய்து வைத்தான் ஜெய்

எப்படி இருக்கீங்க ?என்று கிருஷ்ணாவிடம் கேட்டாள்.

நான் நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க என்று சம்பிரதாயத்துக்கு சில கேள்விகளை கேட்டு வைத்தாள் ராஜேஸ்வரி

அப்போது வீடியோ காலில் ராஜேஸ்வரியை பார்த்தவனுக்கு இருப்புக்கொள்ளவில்லை. கிருஷ்ணா துள்ளினான்.

நீங்க குஷ்பு மாதிரியே அழகா இருக்கீங்க? என்று சொல்ல

‘‘இதைக்கேட்டா குஷ்பு வருத்தப் படுவாங்க…’’ என்று கிண்டலாக பேசினாள் ராஜேஸ்வரி

சரி, நீங்க இருந்தாலும் நல்ல அழகு தான் என்று கட்டையை கொடுத்தான் கிருஷ்ணா

ஏன் இப்படி பொய் சொல்றீங்க? என்று ராஜேஸ்வரி கேட்க

பெண்கள் என்றாலே அழகு தானே என்று மறுபடியும் ஒரு பெரிய குண்டை தூக்கி போட்டான் கிருஷ்ணா

இருவருக்குமான உரையாடல் நீண்டு கொண்டே சென்றது ஜெய் பார்த்துக்கொண்டே இருந்தான் .

ஏன் இப்படி பேசறான்? என்று உள்ளுக்குள் ஒரு உரசல் ஏற்பட்டது.

அப்போது பேசிக்கொண்டிருந்த கிருஷ்ணா ராஜேஸ்வரியிடம் உங்க வாட்ஸப் நம்பர் குடுங்க என்று கேட்டான்.

ஏன் என்று கேட்டாள் ராஜேஸ்வரி

அது சரி சும்மா பேசத்தான் என்று சொல்ல,

வாட்ஸ்அப் நம்பர் எதுக்கு; அட்ரஸை தாரேன் குறித்துக் கொள்ளுங்கள் என்று ராஜேஸ்வரி சொல்லவும் ரொம்பவே ஆர்வமானான் கிருஷ்ணா.

அப்போது ராஜேஸ்வரி… போலீஸ் லைன், போலீஸ் குவாட்டர்ஸ், வீட்டுக்காரர் போலீஸ். பேரு ராஜரத்தினம் வீடு கேட்டு வாங்க என்று ராஜேஸ்வரி சொல்ல…

வெலவெலத்துப் போன கிருஷ்ணா…

ஐயோ ஆள விடு சாமி, ஏதோ நம்ம சும்மா பேச இருந்தா எல்லாம் போலீசா இருக்கு என்று தலைதெறிக்க ஓடினான்.

இதை பார்த்த ஜெய்யின் சிரிப்பு அடங்க வெகு நேரம் ஆனது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *