செய்திகள்

‘‘வாட்ஸ்அப்’ அழகியின் பேச்சில் மயங்கி காமிரா முன் நிர்வாணமாக நின்றதால் விபரீதம்

‘‘வாட்ஸ்அப்’ அழகியின் பேச்சில் மயங்கி காமிரா முன் நிர்வாணமாக நின்றதால் விபரீதம்;

ரூ.22 ஆயிரத்தை ‘பறிகொடுத்த’ வாலிபர்

ரூ.50 ஆயிரம் கேட்டு மிரட்டலுக்கு பயந்து போலீசில் புகார்

பெங்களூரு , ஜூலை 15

வீடியோவில் தினமும் நெருங்கி பேசிப் பழக ஆரம்பித்த இளம்பெண் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, வீடியோ கேமரா முன் நிர்வாணமாக நின்று போஸ் கொடுத்த வாலிபர், அந்தப் பெண்ணின் ஆட்களால் மிரட்டப்பட்டு ரூபாய் 22 ஆயிரத்தை பறிகொடுத்த சம்பவம் , பெங்களூரில் நடந்திருக்கிறது.

ஒயிட்பீல்டு பகுதியில் உள்ள தொத்தனேக்குண்டி என்னும் ஊரைச் சேர்ந்தவர் சைமன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). கடந்த மாதம் முன்பின் தெரியாத ஒரு இளம் பெண், இவருடைய கைபேசியில் அழைத்து பேசி, அறிமுகமானார். தினந்தோறும் பேச இருவருக்கிடையில் நட்பு மலர்ந்தது.

‘‘தினமும் பேசிக்கொண்டே இருக்கிறோமே உன்னை நிர்வாணமாக பார்க்க ஆசை, செய்வாயா…’’ என்று கெஞ்சி– கொஞ்சியபடியே கேட்டார். முதலில் முடியாது, அதெல்லாம் முடியாது… என்று மறுத்துக் கொண்டே இருந்த வாலிபரிடம், ‘நீ நிர்வாணமாக நின்றால்… பதிலுக்கு நானும் நிர்வாணமாக போஸ் கொடுக்கிறேன்… பார்த்து ரசி…’’ என்று சொல்ல… வாலிபரின் ஆசை கண்ணை மறைத்தது.

கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த வாலிபர் வீடியோ கேமரா முன் நின்று நிர்வாணமாக போஸ் கொடுத்தார். அடுத்த நிமிடம் மறுமுனையில் இருந்த அந்தப் பெண் கைபேசி வீடியோ தொடர்பை துண்டித்துக் கொண்டார்.

சில மணி நேரம் கடந்த நிலையில், சைமனுக்கு மறுமுனையில் பேசிய ஆசாமிகள், ‘‘உன்னுடைய நிர்வாணப்படம் எங்கள் கையில் இருக்கிறது. நாங்கள் கேட்கும் ரூ.50 ஆயிரம் பணத்தை கொடுத்து விடு, இல்லையோ… உன் படத்தை வீடியோவில் போட்டு வைரலாகி மானத்தை வாங்கி விடுவோம்…’’ என்று மிரட்டி இருக்கிறார்கள். அதைக் கேட்டு பயந்து நடுங்கிப் போன சைமன், அவர்களிடம் பேரம்பேசி ரூபாய் 22 ஆயிரம் தருவதாக சம்மதித்து, அதை ஆன்லைனில் டிரான்ஸ்பர் செய்தார். அதைப் பெற்றுக்கொண்ட ஆசாமிகள், இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் மிரட்டி இருக்கிறார்கள். பணம் இல்லாவிட்டால் நிர்வாண படத்தை வீடியோவில் போட்டு விடுவோம் என்று சொல்லியிருக்கிறார்கள். இதைக் கேட்டு சைமன் பயந்து நடுங்கி சைபர் கிரைம் போலீசில் புகார் சொல்லி இருக்கிறார். ஆசை வார்த்தை காட்டி மோசம் போனை அதிர்ச்சியிலிருந்து இன்னும் அவர் விடுபட்டு வரவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *