செய்திகள் முழு தகவல்

வாசகர்களின் பாராட்டுகளுடன் 53வது ஆண்டில் மக்கள் குரல்

Makkal Kural Official

சென்னை ,

அற்புதமான 52 ஆண்டுகள் கடந்து வெற்றிகரமாக 53வது ஆண்டில் (செப் 3) வெற்றிப் புன்னகையோடு அடி எடுத்து வைக்கும் “மக்கள்குரலு”க்கு மனம் நிறைந்த வாழ்த்துக்களுடன், மதிப்பிற்குரிய மக்கள் குரல் ஆசிரியர் அவர்களுக்கும் அன்போடு ஆதரவளிக்கும் ஒவ்வொரு மக்கள் குரல் வாசகர்களுக்கும் பணிவன்புடன் மீண்டும் ஒருமுறை வாழ்த்து தெரிவித்து மகிழ்ச்சியுடன் என் எண்ணங்களை இந்த நன்நாளில் பதிவு செய்ய விரும்புகிறேன். தமிழகம் வரலாற்றில், பல காலகட்டங்கள் புரட்சியுடனும் நாட்டு பற்றுடனும் வளர்ச்சிக்கான தாக்கம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இந்திய சுதந்திரப் போராட்டத்தின் ஆரம்ப காலத்திலேயே தமிழகம் ஈடுபட்டதற்கான அடையாளம் “வேலூர் சிப்பாய் கலகம்”. மகாத்மா காந்திஜி ‘தண்டி உப்பு சத்தியாகிரகத்தை’ நடத்திய போது இங்கே ராஜாஜி தலைமையில் ‘வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகம்’ நடத்தப்பட்டதும் ஒரு அடையாளம். பிறகு சுதந்திரம், காங்கிரஸ் ஆட்சி வீழ்த்தி திமுக ஆட்சிக்கு வந்தது. 1972ல் மக்கள் திலகம் ‘எம்ஜிஆர்’ அவர்கள் தமிழக மக்களை தன்னலான தொண்டு புரிய புறப்பட்டபோது அந்த காலகட்டத்தில் அவருடன் துணிவுடன் தோளோடு தோள் நின்று தமிழகத்தில் புரட்சி விதைக்க அடிக்கோலிய பல படிகளில் “மக்கள் குரலும்” ஒரு படி என்றால் அதை மறுக்கவோ, மறக்கவோ இயலாது. காலத்தினால் செய்த நன்றி சிறிது எனும் ஞானத்தில் மாணப் பெரிது – குறல் 102 அரசியல் தெளிவு ஏற்பட உதவி செய்த “மக்கள் குரல்” முன்னோடிகள் டி.ஆர்.ஆர்., M சண்முகவேல்(எம்எஸ்) போன்றவர்களை போற்ற இந்நன்னாளை மகிழ்ச்சியாய் தேர்ந்தெடுக்கிருக்கிறேன். குறிப்பாக, “மக்கள் குரலில்” தவறாமல் வெளியிடப்படுகிற சிறுகதைகள் பல்சுவை விருந்தாகவே உள்ளது. ‘பிரிக்ஸ் கூட்டமைப்புக்கு’ வழிக்கோலலும் பங்கும் பாராட்டுக்குரியது. தொடர்ந்து நடத்தி தமிழகத்தில் வெற்றி பாதையில் நடத்திச் செல்லவும், அமைதி மற்றும் புரட்சியின் பல அடையாளங்களைக் கொண்ட “மக்கள் குரல்” மென்மேலும் வளர்ந்து, நல்ல கொள்கைகளையும் கோட்பாடுகளையும் சங்குகென முழங்கிட வேண்டும் என்று நெஞ்சம் நிறைந்து வாழ்த்துகிறேன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *