கன்னியாகுமரி, ஜூன் 4–
கன்னியாகுமரியில் வாக்கு எண்ணும் மையத்திற்கு கத்தியுடன் ஒருவர் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நாடு முழுவதும் பதிவான ஓட்டுகளை எண்ணம் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. வாக்குகள் எண்ணும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் வயதான சீக்கியர் ஒருவர் வாக்கு எண்ணும் மையத்திற்குள் உறையில் சொருகப்பட்ட கத்தியுடன் வந்தார். வாக்கு எண்ணும் மையத்தில் பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். கத்தியுடன் வந்தது தொடர்பாக அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.