செய்திகள்

வாக்காளர் விழிப்புணர்வு ஓவியப் போட்டி: திருவள்ளூர் கலெக்டர் பொன்னையா ஆய்வு

திருவள்ளூர், மார்ச் 19–

100 சதவிகிதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி பள்ளி மாணவர்கள் கலந்து.ெ காண்ட வாக்காளர் விழிப்புணர்வு போட்டிகளை கலெக்டர் பொன்னையா பார்வையிட்டார்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணைக்கிணங்க, தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2021 முன்னிட்டு, திருவள்ளுர் மாவட்டம், கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியம், கடம்பத்தூர் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 100 சதவிகிதம் வாக்காளர் விழிப்புணர்வு வலியுறுத்தும் வகையில் பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா தலைமையில் நடைபெற்றது.

கலெக்டர் பொன்னையா கூறியதாவது :

சட்டமன்ற தேர்தலில் 100 சதவிகிதம் வாக்குப்பதிவை வலியுறுத்தும் விதமாக, திருவள்ளூர் மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகளிலும் பல்வேறு வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து, மாவட்டத்தில் பள்ளி கல்வித்துறை சார்பாக, பள்ளி மாணவர்கள் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்த மொத்தம் உள்ள 299 அரசு பள்ளிகளில் பயிலும் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள 1,90,608 மாணவர்களில், 14 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 1804 மாணவர்களில் இன்று கடம்பத்தூர் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 74 மாணவர்கள் கலந்துகொண்டு, 100 சதவிகிதம் வாக்காளர் விழிப்புணர்வு வலியுறுத்தும் வகையில் ஒன்றிய அளவிலான போட்டிகளில் பள்ளி மாணவர்கள் சுவரொட்டி விளம்பரம் மற்றும் ஓவியம் தீட்டப்பட்டது. இதில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி, பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, வாக்காளர் விழிப்புணர்வு முக்கிய நிகழ்வான 100 சதவிகிதம் வாக்களிப்பதை வலியுறுத்தும் பள்ளி மாணவர்களின் பெற்றோர்களிடம் கையொப்பம் பெறுவதற்கு 2 லட்சம் வாக்காளர் உறுதிமொழி சான்றுகளை (சங்கல்ப்பத்திரம்) பெற திட்டமிட்டு, இன்று மொத்தம் 1 லட்சத்து 50 ஆயிர-ம் வாக்காளர் உறுதிமொழி சான்றுகளை (சங்கல்ப்பத்திரம்) மாணவ, மாணவிகள் பெற்றோர்களிடம் கையொப்பம் பெற்றதை ஒப்படைத்தனர்.

இவ்வாறு கலெக்டர் பா.பொன்னையா கூறினார்.

இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெ.வெற்றிச்செல்வி, திருவள்ளுர் மாவட்ட கல்வி அலுவலர் புன்னியக்கோட்டி, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர், திருவள்ளுர் வட்டாட்சியர் செந்தில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் பூபாலராயன், பள்ளி தலைமை ஆசிரியர் ரேவதி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *