செய்திகள்

வாக்காளர் பெயர் சேர்த்தல்: விழுப்புரம் கலெக்டர் வீடு வீடாக சென்று ஆய்வு

Spread the love

விழுப்புரம் பிப்.2

விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டத்திற்குட்பட்ட ஓமந்தூர், தென்கொடிப்பாக்கம் மற்றும் கொண்டாமூர் ஆகிய ஊராட்சி பகுதிகளில் வாக்காளர் பெயர் சேர்த்தல் குறித்த விவரத்தை மாவட்ட கலெக்டர் ஆ.அண்ணாதுரை வீடு வீடாக நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது ஊராட்சி பகுதிகளில் வாக்காளர் பெயர் சேர்த்தல் குறித்த விவரத்தினை ஆராய்ந்திடும் வகையில் விண்ணப்பித்தவர்களின் வீட்டிற்கே மாவட்ட கலெக்டர் நேரில் சென்றார். அவர்களிடம் பெயர், வயது மற்றும் இடம் ஆகியன சரியான முறையில் உள்ளதா? என்பதை கேட்டு அறித்தார்.

இதனை தொடர்ந்து ஓமந்தூர், தென்கொடிப்பாக்கம் மற்றும் கொண்டாமூர் ஆகிய ஊராட்சி பகுதிகளில் குடிநீர் வசதி, தெருமின் விளக்கு வசதி, சாலை வசதி உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளதா? என்பதையும் நியாய விலை கடைகளில் தமிழக அரசால் வழங்கப்படும் அரிசி, சர்க்கரை, பருப்பு, கோதுமை மற்றும் எண்ணெய் முறையாக வழங்கப்படுகிறதா? தரமாக உள்ளதா? என்பதையும் பொதுமக்களிடம் மாவட்ட கலெக்டர் ஆ.அண்ணாதுரை கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது திண்டிவனம் சார் ஆட்சியர் டாக்டர்.எஸ்.அனு உடனிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *