புதுடெல்லி, ஜன.25–
தேசிய வாக்காளர் தினத்தில் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு தனது வாழ்த்துகளை இன்று தெரிவித்து உள்ளார்.
இந்தியா, ஆங்கிலேய ஏகாதிபத்திய ஆட்சியில் இருந்து விடுதலை பெற்று சுதந்திர நாடான பின்னர், நமது ஆட்சியாளர்களை தேர்ந்தெடுக்கும் வண்ணம் கடந்த 1950-ம் ஆண்டு ஜனவரி 25-ந்தேதி இந்திய தேர்தல் ஆணையம் நிறுவப்பட்டது.
இதனை முன்னிட்டு கடந்த 2011-ம் ஆண்டில் இருந்து ஒவ்வோர் ஆண்டும் நாடு முழுவதும் ஜனவரி 25-ந்தேதியை தேசிய வாக்காளர் தினம் என கொண்டாடப்பட்டு வருகிறது.
இதன்படி, தேசிய வாக்காளர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை அடுத்து, அதன் முக்கியத்துவம் பற்றி குறிப்பிட்டு, பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.
அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில்,
தேசிய வாக்காளர் தினத்தில் என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். வாக்களிப்பது போன்று எதுவும் இல்லை. நாம் அனைவரும் இன்னும் ஒன்றிணைந்து, தேர்தல்களில் வாக்களித்து அதனை வலுப்படுத்தும் வகையில் பணியாற்றுவோம். நமது ஜனநாயகமும் வலுப்பட செய்வோம் என அவர் தெரிவித்து உள்ளார்.
இதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வரும் இந்திய தேர்தல் ஆணையத்திற்கும் எனது பாராட்டுகள் என அவர் தெரிவித்து உள்ளார்.