செய்திகள்

வாகனப் பதிவெண்ணில் ‘பிஎச்’: இந்தியாவில் புதிதாக அறிமுகம்

டெல்லி, ஆக. 28–

புதிய வாகனப் பதிவில் BH (Bharat series) எனத் துவங்கும் பதிவெண்ணை இந்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.

இதுகுறித்து ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்கள் பணியிட மாற்றம் செய்யப்படும் போது, அந்த நபர் பயன்படுத்தும் வாகனங்களை, வேறு எந்த மாநிலத்திலும் அதே பதிவெண்ணுடன் 12 மாதங்கள் பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து அவர்கள் பணியாற்றும் மாநிலத்தில் தங்கள் வாகன எண்ணை மாற்ற வேண்டிய நிலை உள்ளது. இதனால் அவர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இதைப் போக்கும் நோக்கில், வாகன உரிமையாளர் மாநிலம் விட்டு மாநிலம் மாறும் போது, மீண்டும் பதிவு செய்வதைத் தவிர்க்க புதிய வாகனப் பதிவில் BH (Bharat series) எனத் துவங்கும் பதிவெண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

யார் யாருக்கு பயன்?

அந்த அறிவிப்பின்படி, பாரத் தொடர் (Bharat series) இன் கீழ் இந்த வாகன பதிவு வசதி, தன்னார்வ அடிப்படையில் பாதுகாப்பு பணியாளர்கள், மத்திய, மாநில அரசு ஊழியர்கள், மத்திய, மாநில பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் துறை நிறுவனங்களின் ஊழியர்கள் ஆகியோருக்கு பொருந்தும்.

இந்தப் பதிவின் கீழ் மோட்டார் வாகன வரி, இரண்டு ஆண்டுகளுக்கு அல்லது இரண்டு மடங்காக விதிக்கப்படும். இந்த திட்டம் ஒரு புதிய மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்திற்கு அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படும் போது, இந்தியாவின் எந்த மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்திலும் வாகனங்களை பயன்படுத்தலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *