சினிமா

வழிகாட்டும் மோகன்லால்!

மலையாளத் திரையுலகில் ஏன்..? வேறு எந்தத் திரையுலகிலும் ஒரு நடிகரின் படங்கள் இந்த அளவிற்கு மாற்று மொழியில் ‘ரீமேக்’ ஆகியிருக்குமா..! என்பது சந்தேகம் தான்.

மோகன்லால் இதுவரை மலையாளத்தில் நடித்துள்ள படங்களில் மொத்தம் 55 படங்கள் மற்ற மொழிகளில் மறுஆக்கம் செய்யப்பட்டுள்ளது. இதில், அதிகபட்சமாக தமிழில் மட்டும் 20 படங்கள் மற்றும் தெலுங்கில் 13, இந்தியில் 11, கன்னடத்தில் 9 படங்கள் மறுஆக்கம் செய்யப்பட்டுள்ளது. 1985ம் ஆண்டு, ‘பூவே பூச்சூடவா’ படத்தில் தொடங்கிய மோகன் லால் நடித்த படங்களின் தமிழ் மறுஆக்கம் (ரீமேக்) என்பது, பாபநாசம் வரையிலும் தொடர்ந்து, வெற்றியும் அடைந்து கொண்டிருக்கிறது.

இதில், மிகப்பெரிய வெற்றியடைந்த படங்கள் பல.. ஆனால் எந்த ஒரு படமும் மோசமான தோல்வியை சந்தித்ததில்லை என்பது மோகன்லாலின் கதைத்தேர்வுக்கு சிறந்த எடுத்துக்காட்டு எனலாம்.

தமிழில் ‘மறுஆக்கம்’ செய்யப்பட்ட மோகன்லால் படங்கள் வருமாறு:

1. பூவே பூச்சூடவா 1985 (நோக்கெத தூரத்து கண்ணும் நட்டு)

2. இல்லம் 1988 ( சன்மனசுள்ளவர்க்கு சமாதானம்)

3. மக்கள் என் பக்கம் 1987 (ராஜாவிடே மகன்)

4. மனசுக்குள் மத்தாப்பூ 1988 (தலவட்டம்)

5. அண்ணா நகர் முதல் தெரு 1988(காந்தி நகர் 2 வது தெரு)

6. கதாநாயகன் 1988 ( நாடோடிக்காட்டு)

7. எங்கிருந்தோ வந்தான் 1995(சித்ரம்)

8. திராவிடன் 1989 (ஆர்யன்)

9. கிரீடம் 2007 (கிரீடம்)

10. சீனு 1999 (பரதம் 1991)

11. தலைநகரம் 2006 (அபிமானி)

12. வியட்நாம் காலனி 1994 (வியட் நாம் காலனி)

13. சந்திரமுகி 2005 (மணிச்சித்திரத்தாழ்)

14. முத்து 1995 (தேம் மாவின் கொம்பத்)

15. அழகான நாட்கள் 2001 (மின்னாரம்)

16. வீராப்பு 2007 (ஸ்படிகம்)

17. சும்மா நச்சுனு இருக்கு 2013 (சந்திரலேகா)

18. லண்டன் 2005 (காக்கா குயில்)

19. வெள்ளி திரை 2008 (உதயநானு தாரம்)

20. பாபநாசம் 2015 (த்ரிஷ்யம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *