நாடும் நடப்பும்

வறுமையை ஒழிக்க கோடீஸ்வரர்களின் பங்கு


ஆர். முத்துக்குமார்


சென்னையில் மிகப் பரபரப்பாக இயங்கும் ஐடி நிறுவனங்களின் பட்டியலில் சமீபமாக சிறப்பாக நடைப்போட்டுக் கொண்டிருக்கும் ‘பிரேஷ் ஒர்க்ஸ்’ (Fresh Workers) நிறுவனம் தங்களது பங்குகளை அமெரிக்க பங்குச் சந்தையில் வர்த்தகத்திற்கு அனுமதி பெற்று கடந்த மாத இறுதியில் வர்த்தகமும் துவங்கிவிட்டது. டாலர் 36 என்று வினியோகிக்கப்பட்டு இருந்த பங்குகளின் விலை முதல் நாளில் டாலர் 47 க்கு வர்த்தகமாகி உலகளாவிய முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

10 டாலர் லாபம் என்பது பங்கு உலகில் நிச்சயம் மிகப்பெரிய செய்தியாகும்! இந்நிறுவனத்தை துவங்கியவர் கிரிஷ் மாத்ருபூதம் மிக நவீன கணினி சேவைகளை தர இந்நிறுவனத்தை துவங்கியதாக கூறிவிட்டு லாபம் சம்பாதித்தது.

தான் மட்டும் ஆடம்பர கார்கள், வீடுகள் வாங்குவது நோக்கமில்லை என் நிறுவன ஊழியர்கள் அனைவரும் ஆடம்பர கார் வாங்கும் அளவிற்கு என் நிறுவனம் செயல்பட வேண்டும் என்ற லட்சியத்துடன் துவங்கிய இந்நிறுவனம் பங்கு வெளியீடு செய்த போது ஊழியர்களுக்கு அதில் விசேஷ ஒதுக்கீடும் தந்துள்ளார்.

தற்போதைய பங்கு விலை நிலவரப்படி அந்நிறுவனத்தில் பணியாற்றும் 500 ஊழியர்கள் கோடீஸ்வரர்களாக உயர்ந்து விட்டனராம்! அதில் 69 பேர் 30 வயதை எட்டாதவர்களாம்!

இந்நிறுவனம் தரும் சேவைகள் நுகர்வோருக்கான சேவைகளை உடனுக்குடன் தருவதாகும்.

வாட்ஸ்அப், ஈமெயில், சேட்டிங், குரல்வழி விளக்கப் பதில்கள் போன்ற பல்வேறு ‘கஸ்டமர் சப்போர்ட்’ சேவைகளை பன்னாட்டு நிறுவனங்களுக்கு தருவதுடன் அந்நிறுவன ஊழியர்களையும் அதைச் சரிவர உபயோகித்து மகிழ பயிற்சியும் தருகிறது.

கலிபோர்னியாவில் தலைமை அலுவலகம் கொண்டு இயங்கும் இந்நிறுவனம் சென்னையில் தான் விதையாக விதைக்கப்பட்டு 10 ஆண்டுகளில் ஆல மரமாக உலகெங்கும் வியாபித்துள்ளது. ஒரு மாதத்திற்கு முன்பு தான் 28 லட்சம் பங்குகளை புதிய பங்கு வெளியீடு என்ற வகையில் வெளியிட்டது. அதில் பெருவாரியான பங்குகள் நிறுவன ஆரம்ப கால முதலீட்டாளர்களுக்கும் ஊழியர்களுக்கும் வழங்கப்பட்டு இருக்கிறது.

ஒரு நிறுவனம் பங்கு மார்க்கெட்டில் வெற்றி பெறுவது சகஜமாகி விட்டது. சோமேட்டோ என்ற நிறுவனத்தின் பங்கு விலை கிட்டத்தட்ட 60% பிரீமியத்தில் விற்பனை துவங்கியது.

ஆனால் ஒரு நிறுவனத்தின் 500 ஊழியர்கள் கோடீஸ்வரர்களாக உயர்த்தி இருப்பது இமாலய சாதனை ஆகும்!

500 புது கோடீஸ்வரர்களில் 69 பேர் 30 வயதுக்குட்பட்டவர்கள் என்பதால் ஒரு வித அச்சமும் எழுகிறது. இவர்கள் இந்த திடீர் பணவரவால் தடம் புரண்டு தவறான திசையில் பயணித்து விடக்கூடாது.

அந்தப் புது கோடீஸ்வரர்களாக நாம் சுட்டிக் காட்ட வேண்டியது. வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கும் கோடிக்கணக்கான குழந்தைகளையும் பெண்களையும் பாதுகாக்க வேண்டியது கோடீஸ்வரர்களின் கடமை என்று நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தி வற்புறுத்தியுள்ளார்.

நியூயார்க்கில் ஐ.நா. மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் “வறுமையை ஒழிக்க வேலை வாய்ப்பு மற்றும் சமூக பாதுகாப்பை உறுதி செய்தல்” என்ற தலைப்பிலான கருத்தரங்கம் சமீபத்தில் நடைபெற்றது. இதில் 2014ல் நோபல் பரிசு பெற்ற சத்யார்த்தி பேசியதாவது:– –

கொரோனா தாக்கம் காரணமாக உலகம் முழுவதும் கோடிக்கணக்கான குழந்தைகளும் பெண்களும் வறுமையின் கோரப் பிடியில் தள்ளப்பட்டுள்ளனர்.

லட்சக்கணக்கான குழந்தைj; தொழிலாளர்கள் உருவாக்கப்பட்டு விட்டனர். குறிப்பாக குறைந்த வருவாய் கொண்ட நாடுகளில் குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இவர்களை நாம் உடனடியாக மீட்டெடுத்துக் கல்விக் கூடங்களுக்கு அனுப்ப வேண்டியது உலக நாடுகளின் கடமையாகும். வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குழந்தைகளை பாதுகாக்க தவறினால் நீடித்த வளர்ச்சியை எட்டுவதற்கான இலக்குகளை நம்மால் அடைய முடியாது.

இதுபோன்ற குழந்தை தொழிலாளர்களை மீட்க 52 பில்லியன் டாலர்கள் தேவை. இது எளிதாக தரக்கூடிய பணம் என்பதை யாரும் மறந்து விடக்கூடாது. தற்போது உலக அளவில் மிகப்பெரிய கோடீஸ்வரர்கள் 2,700 பேர் இருக்கிறார்கள். அவர்கள் நினைத்தால், இதில் மகத்தான பங்களிப்பை வழங்க முடியும்.

அனைத்து கோடீஸ்வரர்களும் ஏதேனும் சமுதாய நலப்பணிகளில் ஈடுபட்டு வரலாம், ஆனால் புதுப் பணக்காரர்கள் மனநிலை பிறருக்கு உதவுவதை விட தங்களது மகிழ்ச்சி சமாச்சாரங்களுக்கு மட்டும் என செலவழிக்கவோ, சிந்திக்கவோ கூடாது.

அதை உரிய வகையில் புரிய வைத்து விட்டால் உலக வறுமையை நொடிப் பொழுதில் களை எடுத்து விடலாம்.

புதிய கோடீஸ்வரர்கள் தங்களது சமீபத்து நிலைகளை மறக்காமல் தங்களைப் போல் வறுமையில் தவிர்ப்பவர் நிலையை உணர்ந்து செயல்பட வைத்தால் நாடே செல்வச் செழிப்புடன் வறுமையில்லா நாடாக உயர்ந்து விடும்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *