அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தகவல்
சென்னை, ஏப்.19–
ஓசூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க தமிழ்நாடு அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது என சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட தொழில்துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டசபையில் இன்று தொழில்துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்று வருகிறது. முன்னதாக தொழில்துறையின் கொள்கை விளக்கக் குறிப்பு புத்தகத்தை அத்துறையின் அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து பேசினார். அப்போது அவர் கொள்கை விளக்கக் குறிப்பில் கூறியிருப்பதாவது:–
ஓசூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க தமிழக அரசு ஆய்வு நடத்தி வருகிறது.
சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்க டிட்கோவுக்கு தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது. அரசு அறிவுறுத்தல்படி ஆய்வு மேற்கொள்ள ஆலோசகரை தேர்வு செய்யும் பணியில் டிட்கோ ஈடுபட்டுள்ளதாகவும் கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.