மா. செழியன்
பெல்டெக்ஸ் பிளாக்செயின் தனி மனிதர்களும் அதிக அளவில் பயன்படுத்தி வரும் புதுமை தொழில்நுட்பத்துக்கு பாதுகாப்பான மாற்றாக, பி-சாட், மற்றும் பெல்டெக்ஸ் வாலட், பிஎன்எஸ் போன்றவற்றை அறிமுகப்படுதுவது பற்றி குறிப்பிட்டு இருந்தோம் அல்லவா? அவை தற்போதே, கூகுள் பிளே ஸ்டோர் மூலமாக இலவசமாக தரவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளும் வகையில், அறிமுக நிலையில் (TRIAL VERSION) உள்ளதும் குறிப்பிடத்தக்கது. அறிமுக நிலை முடிந்து, முழு ஆற்றலோடு நடைமுறையிலுள்ள செயலிகள் போல் எளிமையாக பயன்படுத்தும் வகையில் சந்தைக்கு வரும்போது, பணம் செலவளித்து பயன்படுத்தும் நிலை உருவாகும். ஆனால், பாதுகாப்பு என்று வரும்போது செலவு ஒரு பொருட்டாக தெரியாதுதானே.
இதில் பிளாக்செயின் தொழில்நுட்பத்திலான பிசாட் (BCHAT) தரவிறக்கம் செய்து பயன்படுத்த செல்பேசி எண்களோ, மின்னஞ்சல் முகவரி போன்ற எதுவும் தேவைப்படுவதில்லை. கூகுள் பிளே ஸ்டோரில் தரவிறக்கம் செய்து, அதில் உருவாகும் ஹேஷ் கீ–யை (HASH KEY) நமது வேண்டியவர்களுக்கு அனுப்புவதன் மூலம், அவர்களும் ‘பி-சாட்’ தரவிறக்கம் செய்து கொண்டால், நாம் அனுப்பிய ‘ஹேஷ் கீ’ மூலமாக நம்முடன் இணைந்து கொள்ளலாம். அதில் நாம் பகிரும் தகவல்கள் அனைத்தும், பிளாக்செயின் தொழில்நுட்பத்திலானது என்பதால், தரவுகளை திருத்தவோ, வேறு யாரும் திருடவோ முடியாது என்பது சிறப்பு அம்சம்.
பிசாட் (BChat)
அதேபோல், ‘வாட்ஸ் ஆப்’ தடைசெய்யப்பட்டுள்ள சில நாடுகளில் ‘வாட்ஸ் ஆப்’ அழைப்பை மேற்கொள்ள முடியாது. ஆனால், பிளாக்செயின் தொழில்நுட்பத்திலான ‘பிசாட்’ எந்த நாட்டிலும் செயல்படும் என்பதால், வீடியோ, ஆடியோ அழைப்புகளை மேற்கொள்ள முடியும். படங்களை பகிர்ந்து கொள்ளவும், குழுக்களை ஏற்படுத்திக்கொள்ளவும் முடியும். ஆனால், பிசாட் அறிமுக நிலை (Trial Version) என்பதால், நாம் இப்போது பயன்படுத்தி வரும் வாட்ஸ் ஆப் போல் வேகமாக இருக்காது. அதேபோல், பிளாக்செயினில் இயங்கும் பெல்டெக்ஸ் வாலட்டில், தற்போது பெல்டெக்ஸ் கிரிப்டோ கரன்சிகளை மட்டுமே வைத்துக்கொள்ள முடியும் என்று கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து கூகுள் குரோமுக்கு மாற்றாக ‘பெல்டெக்ஸ் பிரவுசர்’ பிளாக்செயின் தொழில்நுட்பத்தில் வெளிவர இருப்பதாக கூறப்படுகிறது. இதனைப் பயன்படுத்தும் போது, நம்முடைய தேடல் தரவுகளை யாரும் கண்காணிப்பதும், அதனை கண்டறிவதும் இயலாது. ஏனெனில், இதன் சர்வர்கள் ஓரிடத்தில் இல்லை, அவை உலகம் முழுவதுமான சங்கிலித் தொடர் பதிவேடு என்பதை முன்பே கண்டோம்தானே. (தொடரும்…)