மா. செழியன்
பிளாக்செயின் தொழில்நுட்பத்தில் தனியுரிமை (PRIVACY) காயின் என்ற வகையில், பல்வேறு கிரிட்டோ கரன்சிகள் உருவாக்கப்பட்டுள்ளது. அதில், தனி மனிதர்களின் தரவுகள் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலான பிரைவேசி காயின்கள் மிகவும் முக்கியமானது என்றே சொல்லவேண்டும். தனியுரிமை கிரிட்டோ காயின்களில் 2014 ஆம் ஆண்டு வெளியான ‘Monero’ முதலிடத்தில் உள்ளது என்று bitcoin.tax/blog/best-privacy-coins-in-2023 என்ற இணையதளம் தெரிவித்துள்ளது. அதேபோல், ZCASH, DASH போன்ற தனியுரிமை பிளாக்செயின் காயின்கள் அடுத்தடுத்த நிலைகளில் உள்ளது.
இதில், மோனேரோ காயின் பணப்பரிமாற்ற விவரங்களை மறைக்க சிக்கலான “கிரிப்டோகிராஃபிக்” (Cryptographic) நுட்பங்களை பயன்படுத்துகிறது. அதேபோல் Zcash காயின் “Zero-knowledge proofs” என்ற நுட்பத்தை பயன்படுத்தி, தேவைப்பட்டால் பணப்பரிமாற்ற விவரங்களை வெளிப்படுத்தும் வசதியை வழங்குகிறது. Dash காயின் “PrivateSend” என்ற தனித்துவமான அம்சம் மூலம், பணப்பரிமாற்றங்களை, யார், யாருக்கு பணம் அனுப்பினார்கள் என்பதை கண்டறிய முடியாமல் செய்கிறது. முதலிடத்தில் உள்ள 3 தனியுரிமை பிரைவசி காயின்களும், பணம் அனுப்புவது மற்றும் பெறுவதை வெளியே தெரியாமல் பாதுகாக்கவே உதவுகிறது.
தனிமனிதர்களின் தனியுரிமை
தனியுரிமையை காக்கும் கிரிப்டோ கரன்சி பட்டியலில் 8 வது இடத்தில் உள்ளதாக கூறப்படுவது பெல்டெக்ஸ் (BELDEX) என்ற பெயரிலான கிரிப்டோ கரன்சி. 2018 ஆம் ஆண்டில் அறிமுகமான இந்த காயின், எளிய மக்களுக்கும் நெருக்கமான பிரைவசிக்கான பணிகளை செய்து வருகிறது. இதுபோல், பல்வேறு பிளாக்செயின்களும் பிரைவசி கிரிப்டோ கரன்சிகளை உருவாக்கினாலும் கூட, பெல்டெக்ஸ் (Beldex) கிரிப்டோ கரன்சி, தனியுரிமை என்ற பிரைவசி காயின்களில் குறிப்பிடத்தக்கது என்று சொல்ல காரணம், பணப் பரிவர்த்தனைகளை கடந்து, எளிய மக்களும் விரும்புகிற, அந்தரங்கம் விரும்புவோருக்கான பணிகளை செய்வதுதான்.
அதனால்தான், ‘பெல்டெக்ஸ் பிளாக்செயின், அனைவரும் பயன்படுத்தும், வாட்ஸ்ஆப், கூகுள் குரோம், போன்றவற்றுக்கு மாற்றாக, தங்களுடைய தகவல்கள் பறிபோகாமல் அந்தரங்கங்களை காக்கும் வகையிலான தனியுரிமை பிளாக்செயின்களை வளர்த்து வருகிறது. இது குறித்து, பெல்டெக்ஸ், தங்களுடைய இணையதளத்தில் வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கையில் (WHITE PAPER) கூறும்போது, பெட்டெல்ஸ் பிளாக்செயின், ‘வாட்ஸ் ஆப்’ போன்ற மெசஞ்சர் செயலிகளுக்கு மாற்றாக, நம்பிக்கை இணையத்தில் ‘பிசாட்’ (BCHAT) என்ற தகவல் பரிமாற்ற செயலியையும், பாதுகாப்பாக இணையத்தில் உலாவ பெல்டெக்ஸ் பிரவுசர் (BELDEX BROWSER), பெல்டெக்ஸ் வாலட் (WALLET) உள்ளிட்ட பல்வேறு பிரைவசி இணைய செயலிகளை அறிமுகப்படுத்துவது பற்றி தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அடுத்தடுத்த பகுதியில் பார்ப்போம்…
…