செய்திகள் முழு தகவல் வருவது புரிகிறதா?

வருவது புரிகிறதா? பகுதி – 11; கிரிப்டோ கரன்சிகளின் வெவ்வேறு நோக்கங்கள்!

Makkal Kural Official

மா. செழியன்


இணையம்–3.0 என்று அழைக்கப்படும் பிளாக்செயின் தொழில்நுட்பம் பாதுகாப்பானது என்பதை முன்பே பார்த்தோம். அதனால்தான் தமிழ்நாடு அரசு பிளாக்செயின் தொழில்நுட்பத்தை “நம்பிக்கை இணையம்” என்ற பெயரில், அதனுடைய வளர்ச்சிக்கு நிதி ஒதுக்கியுள்ளது என்றும் சொன்னோம் அல்லவா? எனவே, நம்பிக்கை இணையம் எங்கெல்லாம் தேவைப்படுகிறதோ, அங்கெல்லாம் விரிவாக்கம் அடையும்தானே! தற்போதுள்ள இணையத்தின் எந்தெந்த தளங்களில், பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பது கண்டறியப்படுகிறதோ, பாதிப்புகள் இருக்கிறதோ அங்கெல்லாம், நம்பிக்கை இணையம் வளர்த்தெடுக்கப்படும்தானே?

அப்படியாக பணத்தில் கள்ள நோட்டு சிக்கல் என்பதற்காக வந்தது ‘பிட்காயின் (BIT COIN). இது ஒரு பரவலாக்கப்பட்ட டிஜிட்டல் நாணயமாக முதன்மையாக கவனம் செலுத்துகிறது. பாதுகாப்பான, பியர்-டு-பியர் பரிவர்த்தனைகளை செயல்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும். இருப்பினும், ஆல்ட் காயின்கள் எனப்படும் மற்ற கிரிப்டோ கரன்சிகள் எளிய பரிவர்த்தனைகளுக்கு, புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் செயல்பாடுகளை அடிக்கடி அறிமுகப்படுத்துகின்றன.

எடுத்துக்காட்டாக, ஈத்திரியம் ஸ்மார்ட் ஒப்பந்தங்களை உருவாக்க அனுமதிக்கிறது. சிலவகை கிரிப்டோக்கள் பல்வேறு ஆன்லைன் விளையாட்டுகளில் பாதுகாப்பு அம்சங்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் நிலங்களின் பத்திரப்பதிவுக்காக சில கிரிப்டோ கரன்சிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கிரிப்டோ நாணயங்களை வெவ்வேறு நாடுகளின் கரன்சிகளாக, மாற்றிக்கொள்வதற்காக கூட TETHER (USDT ) என்ற பெயரில் கிரிப்டோ கரன்சிகள் உருவாக்கப்பட்டுள்ளது. அதேபோல், மருத்துவத்தில் மனிதர்களின் நோய்குறிகள், வெளியே பகிரப்படாமல் பாதுகாப்பாக இருப்பதற்காக, பிளாக்செயின் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.

கல்விச் சான்றிதழில்களில்

போலிகளைத் தடுக்கலாம்!

கல்விச் சான்றிதழ்களில் போலிகள் உருவாக்கப்டுவதை தடுக்க, பிளாக்செயின் தொழில்நுட்பத்தில் டிஜிட்டல் பட்டங்களை வழங்கவும் சரிபார்க்கவும் ஒரு பாதுகாப்பான மற்றும் நம்பகமான முறையை வழங்குகிறது. இது வேலைவாய்ப்புகள் மற்றும் பிற வாய்ப்புகளுக்கு விண்ணப்பிக்கும்போது நேரத்தை மிச்சப்படுத்தவும், மோசடி செய்வதைத் தடுக்கவும் உதவுகிறது.

ஆராய்ச்சித் தரவு பகிர்வு, மருத்துவ பதிவுகள், மருந்து விநியோகத்தில் போலிகளை தடுக்க உதவும் பிளாக்செயின், வாக்குப்பதிவுபிளாக்செயின் தொழில்நுட்பம், வாக்குப்பதிவில் மோசடியைக் குறைக்கவும், வாக்குப்பதிவு செயல்முறையை மிகவும் வெளிப்படையானதாகவும் பாதுகாப்பானதாகவும் மாற்றவும் உதவுகிறது. அதேபோல் நில உரிமை பதிவுகளுக்கான பிளாக்செயின், நில உரிமை பதிவுகளை பாதுகாப்பான மற்றும் துல்லியமான முறையில் சேமிக்கவும் நிர்வகிக்கவும் உதவுகிறது. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்…இதில் ஒரு வகைதான் பிரைவசி பிளாக்செயின்… இது குறித்து அடுத்த பகுதியில் பார்க்கலாம்….


Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *