நாடும் நடப்பும்

வருமுன் காக்க வரும் செயற்கை நுண்ணறிவு

தமிழகம் பின் தங்கி விடாமல் பார்த்துக்கொள்ளும் மாபெரும் பொறுப்பு முதல்வர் ஸ்டாலினுக்கே உண்டு


ஆர். முத்துக்குமார்


செயற்கை நுண்ணறிவு, அதாவது Artificial Intelligence, யுகம் வந்து விட்டது! உங்களது புகார்களை கொடுத்து வீட்டு மின்சாரப் பொருட்களை பழுது பார்க்க வரச் சொல்வது முற்றிலும் தானியங்கி சேவையாக மாறிவிட்டதைப் பார்க்கிறோம்.

அட ஒருவர் நமது புகாரை காது கொடுத்து கேட்டால் நன்றாக இருக்குமே என்ற எண்ணத்தில் புகார் தர முற்பட்டால் அது இன்றைய காலகட்டத்தில் முடியாது அல்லவா? இந்த நவயுக மாற்றத்தின் பின்னணியில் தான் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் இயங்குகிறது.

டிஜிட்டல் நாணயங்கள், கூகுள் மேப்ஸ், பல முன்னணி நிறுவனங்களின் சேவைக்கு உபயோகமாகும் ‘சேட் பாக்ஸ்’ (Chat Box) தொழில் நுட்பத்தின் பின்னணியில் இருக்கும் பிளாக்செயின் அல்லது பெரிய தகவல் திரட்டு உத்வேகம் முற்றிலும் தந்து வருகிறது.

மனிதன் இயந்திரமயமாய் செயல்படக்கூடாது என்று பல தலைமுறைகளாய் கருதி வாழ்ந்து வந்த நாம், இன்று இயந்திரமயமாய் நம்மை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் டிஜிட்டல் தொழில் நுட்பங்களின் கைபாவைகளாய் மாறி வருகிறோம். அதை மறைமுகமாக வரவேற்கவும் செய்து வருகிறோம்.

நாம் எப்போது இன்டர்நெட் சேவைகளை வரவேற்று உபயோகிக்க ஆரம்பித்தோமோ, அன்றே கணினிகளை நமக்கு நெருங்கிய உறவாக ஆக்கிக் கொண்டோம். அதையே நம்மை ஆட்டி படைத்து வழிகாட்டவும் அனுமதித்து விட்டோம்.

இண்டர்நெட் சேவையின் முன்னோடி வரலாற்றில் ஒரு நிகழ்வு உண்டு. ஆஸ்திரேலியாவில் ஒரு நிறுவனம் சுமார் 25 கிலோமீட்டர் சுற்றுவட்டாரத்தில் வாசிங் மிசினை வாங்கி இருந்தாலும் அதில் தங்களது கருவிகளை பொருத்தி இன்டர்நெட் சேவை உதவியுடன் அவர்கள் உபயோகிக்கும் வாசிங் மெசினை பழுது பார்ப்பது முதல் சுத்தமாக வைத்து இயங்க வைப்பது வரை செயல்பாட்டை தொலைதூரத்தில் இயக்கினர்.

அதை இன்று நம்மிடம் தவழ்ந்து கொண்டிருக்கும் பல்வேறு செயலிகளில் இருப்பதை அறிவோம்.

இயந்திரங்களையும் விமானங்களையும் விண்ணில் பறக்க வைப்பதும் இந்த தொலைதொடர்பு சாதனங்கள் ஆகும்.

சமீபமாக ரோபாட்டிக் அறுவை சிகிச்சை பிரபலமாகி விட்டது. கைராசி டாக்டரிடம் சர்ஜரி செய்த காலம் மாறி நவீன ரோபாடிக் தொழில்நுட்ப வல்லுநர்களின் குழுமத்தில் பல்வேறு சர்ஜரிகள் நடைபெற்று வருவதை பார்க்கிறோம்.

கண் புரை அறுவை சிகிச்சைகள் கூட மிகத் துல்லியமாக லேசர் துணையுடன் அறுவை சிகிச்சை மருத்துவர் வேறு அறையில் இருந்து சர்ஜரி செய்து வந்தார், ஏதோ ‘வீடியோ’ விளையாட்டு போல் தான் அது இருந்தது அல்லவா?

அந்தச் சிகிச்சையை நம் கண்களில் செய்துவர துவங்கிவிட்டது ரோபோட்டுகள்.

இவை எல்லாமே ஒரு தலைமுறை பழசாகவே மாறிவருகிறது. தற்போது நமது காரில் பெட்ரோல் தீர்ந்தால் எச்சரிக்கை சமிக்கை வருவதுபோல் மின்சாதனங்களில் ஏதேனும் கோளாறு வரும் அறிகுறிகள் தென்பட்டால் எங்கோ செயல்பட்டுக் கொண்டிருக்கும் கருவிகள் அதை நொடிப்பொழுதில் தானே தெரிந்துகொண்டு வேண்டிய சரிபார்ப்பையும் செய்யும் தானியங்கி சமாச்சாரங்கள் வரத் துவங்கிவிட்டது.

இது மின்னணு சாதனங்களுக்கு மட்டுமின்றி நமது உடல் நலனுக்கும் உதவப் போகிறது.

அதில் 10 ஆண்டுகளுக்கு முன்பே மாரடைப்பு அறிகுறிகளை துல்லியமாய் கணக்கிடும் செயற்கை தொழில்நுட்பம் உருவாக்கிவிட்டனர் விஞ்ஞானிகள்.

உலகம் முழுவதும் மனிதர்களின் எதிர்பாராத உயிரிழப்புக்கு மாரடைப்பு முக்கிய காரணம் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. மாரடைப்பை முன்கூட்டியே அறிவதற்கான ஆராய்ச்சிகளில் இத்துறையைச் சார்ந்தவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் விளைவாக ஒரே ஒரு எக்ஸ்-ரே மூலம் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்பட வாய்ப்பு உள்ளதா என்பதை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் 10 ஆண்டுக்கு முன்பே அறிய முடியும் என அமெரிக்காவின் தேசிய புற்றுநோய் நிறுவன ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

மார்பக எக்ஸ்-ரே எடுத்த பிறகு மாரடைப்பை தடுப்பதற்காக ஸ்டேட்டின் தெரபி (கெட்ட கொழுப்பை குறைப்பது) தேவைப்படும் 11,430 வெளிப்புற நோயாளிகளின் மருத்துவக் குறிப்புகளை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டனர்.

இவர்களின் எக்ஸ்-ரே, புதியநோயாளிகளின் எக்ஸ்-ரேவுடன் ஒப்பிட்டு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்

இப்படி ‘வரும் முன் காப்போம்’ செயல்பாடுகள் புதிய திசையில் மனிதகுலத்தை கைபிடித்து அழைத்துச் செல்கிறது செயற்கை நுண்ணறிவு, இதில் தமிழகம் பின் தங்கி விடாமல் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு முதல்வர் ஸ்டாலினுக்கு உண்டு.

செயற்கை நுண்ணறிவு ஆற்றலை தமிழ்மாநிலத்துக்கு கொண்டுவந்து சேர்க்கும் பேராற்றல் முதல்வர் ஸ்டாலினிடம் நிறையவே இருக்கிறது.

முதல்வர் ஸ்டாலினின் அறிவியல் புரட்சிக்காக ஆவலோடு பாத்திருப்போம்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *