செய்திகள்

வராக்கடன் வசூலை தீவிரம் எதிரொலி: 4½ ஆண்டுகளுக்கு பிறகு ஐ.ஓ.பியில் ரூ.144 கோடி லாபம்

வராக்கடன் வசூலை தீவிரம் எதிரொலி:

4½ ஆண்டுகளுக்கு பிறகு ஐ.ஓ.பியில் ரூ.144 கோடி லாபம்

நிர்வாக இயக்குனர் கர்ணம் சேகர் தகவல்

 

சென்னை, ஜூன். 29–

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (ஐ.ஓ.பி.) 4½ ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் லாபம் சம்பாதித்துள்ளது. நடப்பு ஆண்டு மார்ச் மாதத்துடன் முடிவடைந்த 4–வது காலாண்டில் ரூ.144 கோடி லாபம் சம்பாதித்துள்ளது. வராக்கடன் வசூல் தீவிரம் காரணமாக நஷ்டத்திலிருந்து ஐ.ஓ.பி. மீண்டுள்ளது. நஷ்டமான 42 கிளைகள் மூடப்பட்டது. வராக் கடன் கடந்த ஆண்டில் ரூ.33 ஆயிரத்து 398 கோடியிலிருந்து ரூ. 19 ஆயிரத்து 912 கோடியாக குறைந்தது. ஒரு ஆண்டில் வராக் கடன் ரூ.13 ஆயிரத்து 486 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது என்று இதன் நிர்வாக இயக்குனர் கர்ணம் சேகர் தெரிவித்தார்.

மார்ச் 31–ந் தேதி உடன் முடிவடைந்த நிதியாண்டிற்கான சேமிப்பு கணக்கு தொகை இருப்பு மார்ச் 31 நிலவரப்படி 6.96% வருடாந்திர வளர்ச்சியைப் பதிவு செய்தது.

வர்த்தகம் ரூ.3 லட்சத்து 57 ஆயிரத்து 723 கோடியாக இருந்தது, மொத்த வைப்பு தொகை ரூ.2 லட்சத்து 22 ஆயிரத்து 534 கோடியிலிருந்து 2 லட்சத்து 22 ஆயிரத்து 952 கோடி ரூபாய் ஆக உயர்ந்துள்ளது. வழங்கிய கடன் தொகை 2020 மார்ச் 31 ஆம் தேதி வரை 1 லட்சத்து 34 ஆயிரத்து 771 கோடி ரூபாய் பதிவு செய்தது.

31.03.2020 உடன் முடிவடைந்த ஆண்டிற்கான வராக்கடன் கணக்குகளில் வசூல்

ரூ. 21430 கோடி ரூபாய் ஆகும். புதிய வாராக்கடன் ரூ.7225 கோடியும், இதர செலவினங்கள் ரூ 438 கோடியும் இதில் அடங்கும்.

– மொத்த வாராக்கடன் 21.97 சதவீதத்திலிருந்து 4.78 சதவீதமாகக் குறைக்கப்பட்டது.

– நிகர வாராக்கடன் 10.81 சதவீதத்திலிருந்து 5.44 சதவீதமாகக் குறைக்கப்பட்டது.

மார்ச் 31–ந் தேதி உடன் முடிவடைந்த 4வது காலாண்டில் நிகர லாபம் ரூ .144 கோடி ஆகும்.

சில்லறை மற்றும் சிறு மற்றும் குறுந்தொழில் கடன்களுக்கான அதிக உந்துதல் மேம்படுத்தப்பட்டுள்ளது. அபாயத்தின் பல்வகைப்படுத்தலைத் தவிர விளைச்சல் நிலை. லாபகரமான போக்கைப் புகார் அளிப்பதில் ஏற்படும் இழப்பு கிளைகளில் வங்கி தொடர்ந்து கவனம் செலுத்தும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *