நல்வாழ்வுச் சிந்தனைகள்
நாம் தினமும் மூன்று வேளை சாப்பிடும் உணவுகளில் சிறிதளவாவது நார்ச்சத்து இருக்க வேண்டியது அவசியம். மற்ற எல்லா உணவுகளைக் காட்டிலும் தேங்காய் அறுபத்தி ஒரு சதவீதம் நார்ச்சத்து கொண்ட ஒரு உணவுப் பொருளாக இருக்கிறது.
இதனை பச்சையாக நன்றாக மென்று சாப்பிடுவதன் மூலமாக நார்ச்சத்தானது முழுமையாக நமக்கு கிடைக்கின்றது. அதுமட்டுமில்லாமல் செரிமானத்திற்கு முக்கியமானதாக கருதப்படும் என்சைம்களின் உற்பத்தியினை அதிகரிக்கின்றது.
அதிக அளவில் குளுக்கோசினை கணையத்தில் உற்பத்தி செய்து உடலுக்கு அதிக சக்தியினை தருகிறது.
தேவையற்ற கொழுப்புகளையும் கரைகிறது. பெரும்பாலானோர் தினசரி எதாவது ஒரு கொழுப்பு நிறைந்த உணவினை உட்கொள்கிறோம்.
முறையான உடற்பயிற்சி மற்றும் உணவு பழக்கங்கள் இல்லாதவர்ககுக்கு ,இந்த கொழுப்புச்சத்து நாளடைவில் உடலில் அதிக அளவு சேர்ந்துகொண்டு தொந்தியைப் ஏற்படுத்துகிறது.
தொப்பை போடுகிறது மற்ற இடங்களில் படிக்கின்ற கொழுப்பை காட்டிலும் வயிற்றுப்பகுதியில் படுகின்ற கொழுப்பு மிகவும் ஆபத்தை விளைவிக்கும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
வயிற்றில் கொழுப்பு படிந்து தொந்தி உள்ளவர்கள் பச்சை தேங்காயினை அடிக்கடி சாப்பிட்டு வாழ்ந்தால் போதும்.
வயிற்றுக் கொழுப்பு கரைந்து தொந்தி குறையும்.