வாழ்வியல்

வயிற்றில் உள்ள பூச்சிகளை வெளியேற்றும் பூண்டுப்பால்–2

அன்றாட உணவில் சேர்க்கப்படும் உணவுப் பொருள்கள், பெரும்பாலும் நம் உடலின் உறுப்புகளைச் சீராக செயல்பட உதவி புரிகிறது.. அவற்றில் ஒன்று பூண்டு. இதன் மருத்துவ குணங்கள் ஏராளம்.
தினமும் காலை என்றில்லாமல், வாரம் இருமுறை காலையில் காபி, டீ க்கு பதிலாக குடும்பத்தில் அனைவரும் குடிக்கலாம். அல்லது இரவு நேரங்களில் குடிக்கலாம். தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள், கைநிறைய பூண்டை ஒரு தம்ளர் பாலில் வேக வைத்து பூண்டை மென்று சாப்பிட்டால், போதும் போதும் என்று சொல்லுமளவுக்கு பால் சுரக்கும் என்பார்கள் முன்னோர்கள்.
பூண்டு பால் செரிமான உறுப்புகளைத் தூண்டி எளிதில் ஜீரணத்துக்கு வழி செய்கிறது.. நோய்க்கிருமிகளை அழித்து உடலுக்கு வலு சேர்க்க உதவுகிறது பூண்டு பால். ஆறுமாதங்களுக்கு ஒருமுறை வயிற்றில் இருக்கும் பூச்சிகளை அழிக்க வேண்டும் என்று, பூச்சி மாத்திரைகளை சாப்பிட சொல்லி வலியுறுத்துகிறார்கள் மருத்துவர்கள்.
ஆனால் வாரம் ஒருமுறை பூண்டு பாலை சேர்த்தால், வயிற்றில் பூச்சிகளை வெளியேற்றுவதோடு, இரத்தத்தில் உள்ள கொழுப்புகளையும் நீக்குகிறது. நாட்டுப் பூண்டுகளை பயன்படுத்துங்கள். ஒரே நாளில் பலன் தெரியும். நல்லதை செய்ய நாள் எதற்கு இன்று இரவு பூண்டு பாலோடு உறக்கத்தை நிறைவு செய்யுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *