செய்திகள்

வயநாட்டில் யானை தாக்கி உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ராகுல் காந்தி நேரில் ஆறுதல்

Makkal Kural Official

திருவனந்தபுரம், பிப். 18–

கேரள மாநிலம் வயநாட்டில் 2 வாரங்களில் யானை தாக்கி 3 பேர் பலியான நிலையில், அவர்களுடைய குடும்பத்தினருக்கு ராகுல் காந்தி நேரில் சென்று ஆறுதல் கூறினார்.

நீலகிரி மாவட்டம், பந்தலுாரை ஒட்டி கேரளா மாநிலம் வயநாடு மாவட்டம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் கடந்த மாதம், 31 ந்தேதி லட்சுமணன் என்பவரும் கடந்த, 10 ந் தேதி அஜீஸ் என்பவரும் யானை தாக்கி உயிரிழந்த நிலையில், 16- ந் தேதி, பால் (வயது 42) என்பவரும் யானை தாக்கியதில் உயிரிழந்தார்.

நேரில் விரைந்த ராகுல்காந்தி

அந்த பகுதியில் 2 வாரங்களில் யானை தாக்கி 3 பேர் பலியானதால், பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தி, கடையடைப்பு போராட்டம் நடந்தது. இதனால் தனது இந்திய ஒற்றுமை நீதிப் பயணத்தை தற்காலிகமாக நிறுத்தி விட்டு, ராகுல் காந்தி, வயநாட்டிற்கு விரைந்தார்.

பின்னர் அவர் வயநாட்டில் வனவிலங்குகளால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் ஒவ்வொருவர் வீட்டுக்கும் நேரில் சென்று ஆறுதல் கூறினார். அப்போது சில இடங்களில் ராகுல் காந்தியின் வாகனத்தை நிறுத்தி, பொதுமக்கள் தங்களது புகார்களை கண்ணீர் மல்க தெரிவித்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *