திருவனந்தபுரம், ஜூலை 31–
வயநாட்டில் வசித்து வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 தமிழர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் முண்டக்கை, மேம்பாடி பகுதிகளில் நேற்று அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில் ஒரு ஊரையே காணவில்லை என தெரிகிறது. இந்த நிலையில், முண்டக்கை கிராமத்தில் வசித்து வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
அந்த குடும்பத்தினர் தேனி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்றும், புலம்பெயர்ந்து முண்டக்கை கிராமத்தில் தற்போது வசித்து வந்ததும் தெரியவந்துள்ளது. ஒரே வீட்டில் 11 பேர் வசித்து வந்த நிலையில், நிலச்சரிவில் சிக்கி 9 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.மேலும், வயநாடு நிலச்சரிவு ஏற்பட்ட கிராமங்களில் இருந்த தமிழகத்தை சேர்ந்த 30 பேர் மாயமாகியுள்ளதாகவும், அவர்களை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.