செய்திகள்

வன உயிரின ஆய்வாளர் மரணம்: மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை, ஜூன்.8-

தமிழகத்தை சேர்ந்த சேர்ந்தவர் பிரபல வன உயிரின ஆய்வாளர் ஏ.ஜே.டி.ஜான்சிங் (வயது 79). இவர் உடல் நலம் குன்றி, ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்தில் மரணம் அடைந்தார்.

காடுகள், வன விலங்களுடன் தன் வாழ்வியலை அமைத்து கொண்ட ஜான்சிங் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

வனவிலங்குப் பாதுகாப்பில் சிறந்து விளங்கிய ஏ.ஜே.டி. ஜான்சிங் என்ற ஒரு முன்னணி உயிரியலாளரைத் தமிழ்நாடு இழந்துள்ளது. அவரது பணிவு, இரக்கம் மற்றும் அறிவியல் அடிப்படையிலான கானுயிர்ப் பாதுகாப்பிற்கான அர்ப்பணிப்பு ஆகியவை தொடர்ந்து நம்மை வழிநடத்தும்.

அவருக்கு எனது அஞ்சலியையும், அவரது குடும்பத்தினருக்கும் அன்புக்குரியவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *