செய்திகள்

வனவிலங்குகளை வேட்டையாடிவர் கைது: 9 நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல்

வேலூர், ஜூன் 10–

கணியம்பாடி வனப்பகுதியில் வனவிலங்குகளை வேட்டையாடிவரை கைது செய்த வனத்துறையினர், தப்பியோடியவர்கள் விட்டுச்சென்ற 9 நாட்டு துப்பாக்கிகளையும் பறிமுதல் செய்தனர்.

வேலூர் மாவட்டம் கணியம்பாடி வனச்சரகத்திற்கு உள்பட்ட வனப்பகுதியில் வனச்சரகர் ரவிக்குமார் தலைமையில் வனத்துறையினர் இன்று அதிகாலை 3 மணியளவில் ரோந்து சென்றனர். அப்போது, ஒரு கும்பல் வனவிலங்குகளை வேட்டையாடிக் கொண்டிருப்பது தெரியவந்தது.

9 துப்பாக்கிகள் பறிமுதல்

அவர்களை வனத்துறையினர் துரத்திச் சென்றதில் திருவண்ணாமலை மாவட்டம் அமிர்தி நம்மியம்பட்டு மலைப்பகுதியில் உள்ள கீழ்சார்னாங்குப்பத்தைச் சேர்ந்த சுதாகர் (வயது 23) என்பவரை நாட்டுத்துப்பாக்கியுடன் கைது செய்தனர். மேலும், தப்பியோடிய மற்றவர்கள் விட்டுச்சென்றது என மொத்தம் 9 நாட்டு துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டன. துப்பாக்கிகள் அனைத்தும் அனுமதி பெறாத கள்ளத் துப்பாக்கிகள் என தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து தப்பியோடியவர்களையும் தேடி வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *